திங்கள், 13 பிப்ரவரி, 2023

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் சரியான மதிப்பு 945 ரூபா மட்டுமே

tamil.goodreturns.in   அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் சரியான மதிப்பு 945 ரூபா மட்டுமே!
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் அதன் 52 வார உச்ச விலையான 4,190 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்து 62 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு இன்னும் மலிவாக இல்லை என்று மதிப்பீட்டு குரு என அழைக்கப்பட்ட அஸ்வத் தாமோதரன் கூறுகிறார். நிதிப் பேராசிரியராக இருக்கும் அஸ்வத் தாமோதரன் தனது பிளாக் பதிவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு குறித்து விரிவான கணக்கீட்டை வெளியிட்டு உள்ளார்.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் மோசடி மற்றும் முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கணக்கிட்டாலும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் நியாயமான மதிப்பு ஒரு பங்கு விலை 945 ரூபாய் ஆக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். 

கணக்கீடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் வருவாய் 30% ஆகவும், அதற்குப் பிறகு 5.59% ஆகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 3.6% இலிருந்து 7% ஆகவும் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் அஸ்வத் தாமோதரன் தனது மதிப்பீட்டை வெளியிட்டு உள்ளார்.  
அதானி எண்டர்பிரைசஸ்
 

தற்போது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1,531 ரூபாயாக இருந்தாலும், அதன் அடிப்படைகளான பணப்புழக்கங்கள், வளர்ச்சி மற்றும் ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் நீண்ட கால மதிப்புக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை கணக்கிடுவதற்கு முன், நிறுவனத்தின் பங்கு விலை மிக அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார். அஸ்வத் தாமோதரன் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலை இன்னும் குறைந்தால் கூட நான் வாங்குவதற்குத் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கியக் காரணமாகக் குழும நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அஸ்வத் தாமோதரன்.
அதானி குழும பங்குகள்
 

இன்றைய வர்த்தகத்தில் முடிவில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு அதானி எண்டர்பிரைசஸ் - 14.63 சதவீதம் உயர்வு அதானி போர்ட்ஸ் - 1.33 சதவீதம் உயர்வு அதானி பவர் - 4.99 சதவீதம் சரிவு அதானி டிரான்ஸ்மிஷன் - 0.77 சதவீதம் சரிவு அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் சரிவு அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு ஏசிசி லிமிடெட் - 1.32 சதவீதம் உயர்வு அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.12 சதவீதம் உயர்வு NDTV - 1.07 சதவீதம் உயர்வு பங்குகள் இன்றைய உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணம் அதானி குழுமம் தனது நிறுவன பங்குகளுக்கு எதிராக வாங்கிய கடனை அடைந்தது மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. 

1.11 பில்லியன் டாலர் கடன் அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை அடைமானம் வைத்து சுமார் 1114 மில்லியன் டாலர் அல்லது 1.11 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்றுள்ளது. 9000 கோடி ரூபாய் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 82.67 ரூபாய், 1.114 பில்லியன் டாலர் எனில் கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய் அளவிலான கடன். 

இந்தக் கடனுக்கான பேமெண்ட் தேதி என்னவோ செப்டம்பர் 2024 தான், ஆனால் அதானி குழுமம் இதை முன்கூட்டியே அடைத்துள்ளது. அதானி குழும பங்குகள் இதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ-ன் 168.27 மில்லியன் பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி-ன் 27.56 மில்லியன் பங்குகள், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் 11.77 மில்லியன் பங்குகள் விடுவிக்கப்படுகிறது. இது அனைத்தும் அதானி குழுமத்தின் நிர்வாகத்திடமே வர உள்ளது.

கருத்துகள் இல்லை: