வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா | கர்ப்­பி­ணி­யாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் குழந்தை பெற்ற கழக போராளி"-

 கலைஞர் செய்திகள் : தி.மு.க.வின் முக்­கிய தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்ட நேரத்­தில், முத­ல­மைச்­ச­ராக இருந்த இரா­ஜா­ஜி­யின் வீட்டு முன்பு நிறை­மாத கர்ப்­பி­ணி­யாக சத்­தி­ய­வாணி முத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.
முரசொலி தலையங்கம் (17-02-23)
திரா­விட இயக்­கத்­தின் சலி­யாத பெண் போரா­ளி­யான சத்­தி­ய­வாணி முத்து அம்­மை­யா­ரின் நூற்­றாண்டு விழா தொடங்­கு­கி­றது. ‘திரா­விட இயக்­கத்­தின் நன்­முத்து’ என்று அவ­ருக்­குப் புக­ழா­ரம் சூட்டி இருக்­கி­றார், தமிழ்­நாடு
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முதல் பெண் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் – தி.மு.க.வின் முதல் பெண் அமைச்­சர் –- தமிழ்­நாட்­டில் இருந்து ஒன்­றிய அமைச்­ச­ரான முதல் பெண் -– என்ற பெரு­மைக்­கு­ரி­ய­வர் அம்­மை­யார் அவர்­கள்.
தனக்­கென உறு­தி­யான கொள்­கை­யும், அதில் சம­ர­சம் செய்து கொள்­ளாத துடிப்­பும் கொண்­ட­வ­ராக அவர் எப்­போ­தும் இருந்­துள்­ளார்.


1923ஆம் ஆண்டு பிப்­ர­வரி 15ஆம் தேதி செங்­கற்­பட்­டில் பிறந்த சத்­தி­ய­வாணி பள்­ளிப்­ப­டிப்பை முடித்­த­பின் ஹோமி­யோ­பதி மருத்­து­வப் படிப்பை படித்­தார். இவ­ரது சமூ­கச் சிந்­த­னைக்கு அடிப்­ப­டைக் கார­ணம் அவ­ரது தந்­தை­யார். இறு­தி­வ­ரை­யில் சுய­ம­ரி­யா­தைக்­கா­ர­ரா­கவே வாழ்ந்து மறைந்­த­வர் இவ­ரது தந்தை க.நாகை­நா­தர். தந்தை பெரி­யா­ரின் சுய­ம­ரி­யா­தைக் கருத்­துக்­க­ளால் ஈர்க்­கப்­பட்டு அவ­ரது இயக்­கத்­தில் தன்னை இணைத்­துக் கொண்­ட­வர் நாகை­நா­தர் அவர்­கள். நீதிக்­கட்சி, சுய­ம­ரி­யாதை இயக்­கம், தென்­னிந்­திய பவுத்த சங்­கம், அகில இந்­திய பகுத்­த­றி­வா­ளர் சங்­கம் ஆகி­ய­வற்­று­டன் பணி­யாற்­றி­ய­வர் நாகை­நா­தர். தந்தை செல்­லும் அனைத்து மாநா­டு­க­ளுக்­கும் இவ­ரும் செல்­வார். அதில் இருந்து உரம் பெற்­ற­வர் சத்­தி­ய­வாணி அவர்­கள்.

காங்­கி­ரசு இயக்­கத்­தில் பணி­யாற்றி வந்த எம்.எஸ்.முத்து அவர்­கள், 1938 இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தின் போது காங்­கி­ர­சில் இருந்து வில­கி­னார். தந்தை பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தில் தன்னை இணைத்­துக் கொண்­டார். சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரைத்­தான் தனது மக­ளுக்கு திரு­ம­ணம் செய்து வைக்க வேண்­டும் என்று நாகை­நா­தர் நினைத்­தார். அதன்­படி சத்­தி­ய­வாணி அவர்­களை, முத்து அவர்­க­ளுக்கு திரு­ம­ணம் செய்து வைத்­தார்­கள். இயக்­கம் சார்ந்த கொள்­கைத் திரு­ம­ண­மாக அது நடந்­துள்­ளது.

1944 இல் நீதிக்­கட்­சி­யின் பெயர் திரா­வி­டர் கழ­க­மாக மாற்­றப்­பட்ட சேலம் மாநாட்­டில் சத்­தி­ய­வாணி முத்து கலந்து கொண்­டார். தொடர்ச்­சி­யாக திரா­வி­டர் கழக மாநா­டு­க­ளில் கலந்து கொண்­டார். நாடு முழுக்க திரா­வி­டர் கழ­கப் பிரச்­சா­ரம் செய்­தார். திரா­வி­டர் கழ­கக் கொடியை ஏற்றி வைத்­தார். ‘இருண்டு கிடக்­கின்ற இந்­தச் சமு­தா­யத்­தில் திரா­வி­டர் கழ­கம் என்ற ஒளி மூலம் மக்­கள் அறி­யா­மையை நீக்­கப் பாடு­பட அமைந்­த­து­தான் திரா­வி­டர் கழ­கம்’ என்று மேடை­தோ­றும் முழங்­கி­னார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உத­ய­மான போது அதில் முக்­கி­யப் பங்­க­ளிப்­பா­ள­ராக சத்­தி­ய­வாணி முத்து அம்­மை­யார் இருந்­தார். கழ­கத்­தின் கொள்கை விளக்­கச் செய­லா­ள­ராக 1959 முதல் 1968 வரை பணி­யாற்­றி­னார்.

1953ஆம் ஆண்டு குலக்­கல்­வித் திட்­டத்­திற்கு எதி­ராக தி.மு.க. கடு­மை­யாக எதிர்ப்­பு­க­ளைத் தெரி­வித்து வந்­தது. அப்­போது, தி.மு.க.வின் முக்­கிய தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்ட நேரத்­தில், முத­ல­மைச்­ச­ராக இருந்த இரா­ஜா­ஜி­யின் வீட்டு முன்பு நிறை­மாத கர்ப்­பி­ணி­யாக சத்­தி­ய­வாணி முத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டார். கொள்­கைப்­பி­டிப்­பும், அபா­ரத் துணிச்­ச­லும் நிறைந்த சத்­தி­ய­வாணி முத்து, யாரும் எதிர்­பா­ராத நேரத்­தில் இரா­ஜா­ஜி­யின் வீட்­டிற்­குள் நுழைந்து தரை­யில் படுத்து போராட்­டத்­தைத் தொடர்ந்­தார். 1965ஆம் ஆண்­டில் இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தி­லும் நிறை­மாத கர்ப்­பி­ணி­யாக சிறை சென்று சிறை­யி­லேயே குழந்தை பெற்­றார் சத்­தி­ய­வாணி முத்து.

1957-ல் தி.மு.க. கள­மி­றங்­கிய முதல் சட்­ட­மன்­றத் தேர்­த­லில், வெவ்­வேறு சின்­னங்­க­ளு­டன் சுயேச்சை வேட்­பா­ளர்­க­ளா­கப் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற 15 பேரில் சத்­தி­ய­வா­ணி­யும் ஒரு­வர். 1967ஆம் ஆண்டு பெரம்­பூர் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று பேர­றி­ஞர் அண்­ணா­வின் அமைச்­ச­ரவை­யிலும், பின்­னர் தலை­வர் கலை­ஞ­ரின் அமைச்­ச­ர­வை­யி­லும் தொடர்ந்து இடம் பெற்­றார். சமூ­க­ந­லம், மீன்­வ­ளம், செய்­தித்­துறை, ஆதி­தி­ரா­வி­டர் நலன் உள்­ளிட்ட துறை­களை கவ­னித்­தார்.

இந்­தி­யா­வில் அம்­பேத்­கார் பெய­ரில் முதன்­மு­த­லில் கல்­லூரி தொடங்­கப்­பட்­டது தமிழ்­நாட்­டில்­தான். அது­வும் அமைச்­ச­ராக சத்­தி­ய­வா­ணி­முத்து இருந்­த­போது, முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­க­ளி­டம் கோரிக்கை வைத்­துப் பெற்று, அதனை தனது பெரம்­பூர் தொகு­தி­யில் திறந்­தார். 1978ஆம் ஆண்டு மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராகி, அப்­போ­தைய பிர­த­மர் சரண்­சிங் அமைச்­ச­ர­வை­யில் ஒன்­றிய அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­த­வர் அவர். பின்­னர், “தாழ்த்­தப்­பட்­டோர் முன்­னேற்­றக் கழ­கம்” என்ற அமைப்­பைத் தொடங்கி நடத்தி வந்­தார். 1989 ஆம் ஆண்டு மீண்­டும் கழ­கத்­தில் தன்னை இணைத்­துக் கொண்டு பணி­யாற்­றி­னார். 1999ஆம் ஆண்டு நவம்­பர் 11-–ஆம் தேதி கால­மா­னார். சத்­தி­ய­வா­ணி­முத்­து­வின் இறுதி ஆசை­யின்­படி, அவ­ரது உட­லுக்கு தி.மு.க. கொடி போர்த்­தப்­பட்டு மரி­யாதை செய்­யப்­பட்­டது.

இறு­தி­வ­ரைக்­கும் கொள்­கைப் போரா­ளி­யாக தனது உறு­தியை வெளிப்­ப­டுத்தி வந்­தார். ‘’பெரி­யா­ரின் போத­னை­யும், பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் அடிச்­சு­வ­டும் என்னை நிமிர்ந்து நிற்­கச் செய்­துள்­ளது” என்று சொன்­னார். பேர­றி­ஞர் அண்­ணாவை ‘அன்­புத் தெய்­வம்’ என்று அழைத்­த­வர் அவர்.‘’சாதி­கள் ஒழிக்­கப்­பட வேண்­டும், சமு­தா­யத்­தில் உயர்ந்­த­வன் தாழ்ந்­த­வன் என்ற பாகு­பாடு இருக்­கக் கூடாது என்­பது வள்­ளு­வர் காலத்­தி­லி­ருந்தே வகுக்­கப்­பட்ட விதி என்­றா­லும், உண்­டாக்­கப்­பட்­டுள்ள சாதி­க­ளை­யும் சாதி­க­ளி­னால்

உரு­வான ஏற்­றத் தாழ்­வு­க­ளை­யும் உடைத்து எறிந்து பேத­மற்ற சமு­தா­யத்தை உரு­வாக்க ஒரு கடு­மை­யான போராட்­டத்தை மேற்­கொண்­ட­வர் தந்தை

பெரி­யார்” –- என்று எழு­தி­ய­வர் அவர்.‘’அரி­ஜன முன்­னேற்­றத்­துக்­காக காந்தி பாடு­பட்­டார். ஆனால் அவ­ரால் மதத்­தில் இருக்­கும் வேறு­பாட்­டைத் தொட­மு­டி­ய­வில்லை. பெரி­யார்­தான் வர்­ணா­சி­ரம தர்­மத்­தையே எதிர்த்­தார். உயர் ஜாதி இனத்­தையே எதிர்த்­தார். அனை­வர் பகை­யை­யும் தேடிக் கொண்­டார். தாழ்த்­தப்­பட்ட மக்­க­ளுக்­கா­கப் போராடி, பெரும்­பான்மை மக்­க­ளையே தனது பகை­வ­ராக ஆக்­கிக் கொண்­டார். அத­னால்­தான் தாழ்த்­தப்­பட்ட மக்­கள் தந்தை பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தில் பங்கு கொண்­டார்­கள். இந்த இயக்­கம் தான் சமு­தா­யத்­தில் பெரும் புயலை உரு­வாக்­கி­யது” என்று தந்தை பெரி­யா­ரின் சமூக சமத்­து­வச் சாத­னைகளை மிகச் சரி­யாக அடை­யா­ளம் கண்டு எழு­தி­ய­வர் அம்­மை­யார் சத்­தி­ய­வாணி முத்து அவர்­கள்.

சுய­ம­ரி­யாதை இயக்க காலத்­தில் எத்­த­கைய சுய­ம­ரி­யா­தைக் கொள்­கை­யில் உறு­தி­யாக இருந்­தாரோ, அதே அள­வுக்கு வாழ்­வின் இறு­தி­வரை சுய­ம­ரி­யா­தைக்­கா­ர­ரா­கவே வாழ்ந்து மறைந்த போராளி அவர். சத்­தி­ய­வாணி முத்­து­வின் புகழ் வாழ்க!!

கருத்துகள் இல்லை: