புதன், 12 ஜூலை, 2023

பாஜகவை வீழ்த்தும் தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடர்' -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மலையாள மனோரமா

பாஜகவை வீழ்த்தும் தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடர்' -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மலையாள நாளிதழ் !
கலைஞர் செய்திகள்  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல மலையாள நாளிதழான மலையாள மனோரமா நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,
தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் காரணமாக அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பின்தங்கிய தமிழ்நாடு தற்போது முன்னேறி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, நம் மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது தவிர முதலமைச்சரே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இது தவிர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் , உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் போன்ற நாடு வியக்கும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களையும் திமுக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பாஜகவை வீழ்த்தும் தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடர்' -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மலையாள நாளிதழ் !

தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களுக்கு பல்வேறு நாளிதழ்களும், அரசியல் தலைவர்களும் புகழாரம் சூட்டிய நிலையில், தற்போது பிரபல மலையாள நாளிதழான மலையாள மனோரமா நாளிதழும் புகழாரம் சூட்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.செயல்பாடு குறித்து மலையாள மனோரமா பத்திரிகை தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், "தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து அனைவரின் பார்வையையும் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்தியாவே பாராட்டுகிறது.பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆகியவை இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மாபெரும் மக்கள் நலத் திட்டம்" என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பதில் முன்னின்று செயலாற்றி தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடராக’ திகழ்கிறார் என்றும் முதமைச்சரின் அரசியல் செல்வாக்கையும் பாராட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: