thesam.net: ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுதாக கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திங்கள், 10 ஜூலை, 2023
ஈரானில் ஆறு மாதங்களில் 354 பேருக்கு தூக்குத்தண்டனை – திணறும் மனித உரிமைகள் அமைப்புக்கள் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக