சனி, 28 ஜனவரி, 2023

Tyre Nicholas death கறுப்பின இளைஞரை பொலிஸார் தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

 வீரகேசரி : வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.
அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை கறுப்பின பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர் அலறுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க பொலிஸ் திணைக்களம் நான்கு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
முதலாவது வீடியோ பொலிஸார் நிக்கொலசை காரிலிருந்து இறங்குமாறு சத்தமிடுவதை காண்பித்துள்ளது.


நான் ஒன்றும் செய்யவில்லை என அவர் சத்தமிடுகின்றார், அதற்;கு பொலிஸார் அவரை நிலத்தில் இருக்குமாறு சத்தமிடுகின்றனர்.
கைகளை பின்னால் கட்டுமாறு ஒருவர் சத்தமிடுகின்றார்,அதற்கு நான் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கின்றேன் என நிக்கொலஸ் சத்தமிடுகின்றார்.

அதன் பின்னர் பொலிஸார் நி;க்கொலசை டேசர் செய்வதையும் அவர் தப்பியோடியதையும் காணமுடிகின்றது.

இரண்டாவது வீடியோவில் குடியிருப்பு பகுதியொன்றில் அவரை பிடித்த பின்னர் பொலிஸார் மோசமாக தாக்குகின்றனர்.

இரண்டு பொலிஸார் அவரை பிடித்துக்கொண்டிருக்க ஏனையவர்கள் அவரை தாக்குகின்றனர்.

அடுத்தடுத்த வீடியோக்கள் நிக்கொலஸ் அம்மா என அலற அலற அவரை பொலிஸார் தாக்குவதை காண்பித்துள்ளன.

இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன

கருத்துகள் இல்லை: