வியாழன், 26 ஜனவரி, 2023

மற்ற மதங்கள் அபின் என்றால் கம்யூனிஸம் ஹெரோயின்

 Rishvin Ismath  :  "மற்ற மதங்கள் அபின் என்றால் கம்யூனிஸம் ஹெரோயின்"
-(சில) சிவப்பு சங்கிகளைப் பார்க்கும் போது இப்படித் தான் தோன்றுகிறது.
தெக்குத்தெரு ஹமீது : எப்பேர்பட்ட கட்சியா இருந்தாலும்
அது வளரும் ெரைதான் நேர்வழி
வளர்ந்த பிறகு கட்சியின் ஓனர் வைத்தது தான் சட்டம்
சரிங்க பாய்
வழக்கம்போல உங்களுக்கு எதிரா பதில சொல்றவனை உள்ளே தூக்கி போட்டுட்டா மேட்டர் ஓவர்
Shameel Jainulabdeen :  தெக்குத்தெரு ஹமீது குண்டு வ்சிக்கிரவன் உள்ளே போனா உனக்கேன் வலிக்குது? பதில் சொல்றவன உள்ளே போட்ரதுன்னா சனோபர் அலி, ஷேக் ஹிதாயதுல்லா லாம் இங்கே எப்போ எதுக்கு பதில் சொன்னான்? சொல்லு பார்க்கலாம்?
சும்மா விக்டிம் கார்ட் ப்ளே பண்ணி தீவிரவாதிகளை நல்லவங்களா காட்ட முயற்சி பண்ணாதே.



Ram Vignesh :  Problem for me with communism right off the bat are...
1. When power is overwhelmed with a single leader or premiere it most of the time ended with tyrannical dictatorship. Ex., Stalin, Mao, xin ping, Kim jong un etc..
2. Voice against the govt are met with executions in almost all communist nations so far.
3. Utopia for all people is almost not possible unless and untill all the nations in the world follow a same ideology(in terms of trades, Hunan resources & Science) and travel in the same path which is not likely for forseable future.
4. The psycological urge for people to elect their own leader and to dismantle him when they feel threatened always triumphs any kind of subjucations good or bad. And not to forget need to voice their opinion. We are also cognitively evolved species.

Pathman Selvaraj  : எல்லாம் லூசு அருணன் கோஷ்டி

Rishvin Ismath :Ram Vignesh 'செல்வத்தை, வளங்களை சமமாக பங்கீடு செய்வது' என்பது ஒரு அழகான கற்பனை, நிஜத்தில் ஒரு போதுமே சாத்தியமில்லாதது. கம்யூனிச ஆட்சியின் கீழ் கூட செல்வம் சமனாக இருக்கவில்லை. ஸ்டாலினும், குருசேவும் பாவித்த பொருட்களும், வாழ்ந்த வாழ்க்கையும் கிராமத்தில் வாழ்ந்த விவசாயிக்கு இருக்கவில்லை. இன்றைக்கு கிம் ஜுங்உன் இற்கு இருக்கும் வாழ்க்கையும், அதிகாரமும் ஏனைய வடகொரியர்களுக்கு சமனாகப் பகிர்ந்தளிக்கப் பட்டா இருக்கின்றன? இல்லையே.
சமனான செல்வம், சமனாக வளங்களைப் பகிர்தல், சமனான அறிவு, சமனான உணவு, சமனான சம்பளம், சமனான உடற்பயிற்சி, சமனான ஆரோக்கியம்.... இப்படியே பட்டியல் போட்டுப் பாருங்கள், எதுவுமே சாத்தியமில்லை என்பது புரியும்.
சில பொய்களும், கற்பனைகளும் யதார்த்தத்தை விட மிக அழகாக இருக்கும், ஆனால் அவற்றால் எப்பொழுதுமே பொய்களாகவும், கற்பனைகளாகவும் மட்டுமே இருக்க முடியும், ஒரு போதும் நிஜத்தில் சாத்தியமாக முடியாது.
அதானி போன்ற ஊழல்கள், மோசடிகள் நடக்காமல் இருக்க சட்டங்கள், கண்காணிப்பு முறைகள், கணக்காய்வு முறைகள் என்பவற்றில் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, கம்யூனிஸ்ம் ஒரு போதும் தீர்வல்ல.
வாகன விபத்துக்கள் நடக்கின்றன, மரணங்கள் நிகழ்கின்றன என்றால் அவற்றை முடிந்தவரை குறைக்க வாகனங்களில் மேம்படுத்தல்கள், மிகச் சிறந்த சாரதிப் பயிற்சி, முறையான வீதிக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்குவதுதான் தீர்வே தவிர, வாகனங்களே வேண்டாம் என்று நடந்து போவதோ, மாட்டு வண்டில்களைப் பயன்படுத்துவதோ தீர்வுகள் அல்ல.
(வேறொரு இடத்தில் வழங்கிய பதில் - மேம்படுத்தலுடன்)

Marturi Vasanth :   உண்மையான கம்யூனிசம் இன்னும் வர்ல பாஸ்

Marturi Vasanth :    சாரி தோழர்

Ram Vignesh  :   அதே தான்.....
"perfect utopia" உலகம் 'ஜீசஸ் பூமிக்கு திரும்ப வருவார்' போன்றது.

Kulitalai Mano  :  Rishvin Ismath இப்படியா ஒரு பச்சபுள்ளைய இந்த அடி அடிக்கிறது
சரிசரி
ஒரு குவார்ட்டரை வாங்கி தந்தாவது
தெளியவிட்டு தெளியவிட்டு கம்யூனிசத்தை அடிங்க ரிஷ்வின்
பாவமா இருககு

Kulitalai Mano :  காலங்கள் மாற சித்தாந்தங்களும் மாறும்
கம்யூனிசம் மார்க்ஸ் காலத்தில் சரியாக இருந்திருக்கலாம்
ஜனநாயக விழுமியங்கள் உயிர்பெற்றபின்பு கம்யூனிசம் பொருளற்றதாகி விட்டது

Suresh :   கம்யூனிசத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை ஒத்த வழி பாதை அதற்குள்ளே ஒருவன் விமர்சனம் செய்தால் கொல்லப்படுகிறான்.
மதமும் இதே தான் செய்கிறது
ஆனால் ஒரு அறிவியல் ஆளன் தனது கருத்தை ஆதாரங்களுடன் மறுக்கும்போது ; தவறை உணர்ந்து அடுத்த நிலைக்கு செல்கின்றான் பகுத்தறிவு எல்லை இதுதான்
மதவாதம் அல்லது மதவாத ஒத்த ஃபார்முலாவில் யார் இயங்கினாலும் நானே இயங்கினாலும் என்னை கேள்வி கேட்க வேண்டும் என்ற கருத்தியல் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் பகுத்தறிவு முழுமையாக மலரும்

Santhirapalan Saminathar : பசுத்தோல் போர்த்த புலியில் அகப்பட்ட கதைதான் இது. உண்மையான கம்யூனிசம் வேறு .மதவாத கம்யூனிசம் வேறு.
கம்யூனிசம் தவறு என்று கூறுவதென்றால் கால்மாக்ஸ்,எங்கேல்ஸ் கட்டுரைகளை வாசித்து விமர்சிக்க வேண்டும். இதை விட்டு பசுத்தோல் போர்த்த புலியிடும் கடிவாங்கி விட்டு உண்மையான பசுவைப்பார்த்து அலறுவது நகைப்புக்கு இடமானது.

Rishvin Ismath  :  Santhirapalan Saminathar "கம்யூனிஸம் தவறு என்று கூறுவதென்றால் கால்மாக்ஸ்,எங்கேல்ஸ் கட்டுரைகளை வாசித்து விமர்சிக்க வேண்டும்" - இப்படி மட்டும் தான் விமர்சிக்க வேண்டும் என்று நிர்ணயித்தது யார்?

Santhirapalan Saminathar : Rishvin Ismath கம்யூனிசம் பற்றி முதலில் விஞ்ஞானபூர்வமாக விளக்கம் அளித்தவர்கள் அவர்களே. தத்துவ உலகில் இருந்த கருத்துமுதல் வாதம் பொருள்முதல் என்றவற்றை கற்று இரண்டின் நல்ல அம்சங்களையும் இணைத்து உருவானதே வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதம். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே கம்யூனிசத்தை நோக்கி உலகம் நகர்கிறது என்பதை நிறுவினார். எனவே உங்கள் விமர்சனம் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். இதை விட்டு யார் யாரோ சொல்வது செய்வது எல்லாம் கம்யூனிச செயல் ஏன நம்புவது அறிவியல் அல்ல.
உதாரணமாக முஸ்லீம் மதத்தை விமர்சிப்பது குர்ரான்,கதீஸ்களில் இருந்து விமர்சிக்க வேண்டும் . அதுவே முறை அதைவிட்டு ஆப்கானில் உள்ள ஒரு பிரிவினர் கூறுவதுதான் முஸ்லீம்மதம் என அதை விமர்சிப்பது சரியல்ல.

Ahamed Rahman  : Santhirapalan Saminathar இது Not true Scotsman fallacy மாதிரி இருக்கே? ஸ்டாலின், லெனின், மாஓ, கஸ்ட்ரோ இவங்க உண்மையான கம்யூனிஸ்ட்டா? இல்லையா?
ஆட்டு ஒட்டி :

Rishvin Ismath  :Santhirapalan Saminathar உங்களுடைய கருத்துக்களுடன் உடன்படா விட்டாலும் கூட உங்களுடைய பார்வை வித்தியாசமாக இருப்பதைக் காண்கின்றேன். உங்கள் வார்த்தைகள் நாகரீகமாக இருக்கின்றன, பேச்சிலே ஒரு சுய நேர்மை இருக்கின்றது. யாரையும் வலிந்து வெள்ளையடித்துப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற நேர்மையற்ற தன்மை உங்களிடம் இல்லாமல் இருக்கின்றது. உங்களுடன், Sri Devan போன்றவர்களுடன் கம்யூனிசம் பற்றித் தொடர்ந்து பேச விரும்புகின்றேன். நான் குறிப்பிடும் "சிவப்பு சங்கி" என்ற வட்டத்திற்குள் நீங்கள் அடங்க வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாக சொல்லிக் கொள்கின்றேன்.
உங்களது பார்வையில் கம்யூனிசம் என் இன்றைய காலத்திற்குத் தேவை என்பதை சுருக்கமாக சொல்லுங்கள், தொடர்ந்து கலந்துரையாட ஆர்வமாக இருக்கின்றேன்.

Sri Devan  :  Rishvin Ismath கம்யூனிசம் மக்கள் தொகை குறைவான அமெரிக்காவும் மற்ற நாடுகளுக்கும் அவசியமற்றது என்பதை ஏற்கிறேன் தல.... மக்கள் தொகை அதிகமான நாடுகளுக்கு ஏழ்மையில் தவிக்கும் அடித்தட்டு மக்களின் வறுமையை ஒழிக்க வேறுவழியில்லைங்க தல....

Rishvin Ismath Sri Devan //மக்கள் தொகை அதிகமான நாடுகளுக்கு ஏழ்மையில் தவிக்கும் அடித்தட்டு மக்களின் வறுமையை ஒழிக்க வேறுவழியில்லைங்க// கல்வி வளர்ச்சி இந்த நிலைமையை மாற்றலாம்.

Sri Devan ; Rishvin Ismath கல்வி வியாபாரமாகி நாளாகிவிட்டது தலைவா.... இதுவே யதார்த்தம்.... என் மகன் முதலாம் வகுப்பிற்கே கல்வி கட்டணம் ரூ.75000/- (சென்னை அல்ல)..... கல்வியை முழுவதுமாக மக்களின் அடிப்படை உரிமையாக்கினால் மட்டுமே ஏழைகளுக்கு கல்வி மூலம் பொருளாதார வளமடைவது சாத்தியம்......
தாங்கள் மனித சமூகத்தில் மதச் சச்சரவுகளைப் போக்க உயிரை துச்சமாக கருதி(முஸ்லிம் தனது ஒரிஜினல் அடியிலேயே நாத்திகம் பேசுவது உயிர் பயமில்லாதவரால் மட்டுமே இயலும்) செயல்படுகிறீர்கள்..... அதனாலேயே தங்களது மீது மிகுந்த மரியாதை உண்டு.‌.....
சிகப்பு சங்கி --. நான் கம்யூனிச ஆதரவாளன்... கட்சிக்காரன் அல்ல... நான் தற்போது சுகபோகமாக வசதியாக வாழ்கின்றன.... முடிந்த அளவு வறியவர்களுக்கு உதவுகிறேன்.... எனக்கு கம்யூனிசம் தேவையில்லை.... ஆனால் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளற்ற வர்களுக்கு அதன் தேவை ஆழமாக வேரூன்றி இருக்கும்... அதனாலேயே அவர்களின் ரியாக்ஷன் தங்களது பதிவுகளில் கடுமையானதாக சங்கித்தனமாக இருக்கலாம்....
தாங்களும் மத வேறுபாடுகளை மனித சமூகத்திலிருந்து நீக்க பாடுபடுவது போல நித்தம் நரக வேதனை அனுபவிக்கும் வறியவர் துயர் நீக்க யோசியுங்களேன் தல....

Santhirapalan Saminathar  :  Rishvin Ismath கம்யூனிசம் பற்றி முகநூல் உரையாடலில் மட்டும் புரிந்து கொள்வது கடினம். நீங்களாக சுயமாக தேடிப்படிக்க வேண்டும் .
இதற்கு காலமாக்ஸ்,எங்கேல்ஸ்சின் நூல்கள் உதவியாக இருக்கும். கம்யூனிசம் என்பது ஒரு சமூக அமைப்பு அந்த அமைப்பில் குடும்பம்,தனிச்சொத்து,அரசு மூன்றும் இருக்காது. இச்சமூக அமைப்பு தோன்ற இன்னும் பல நூற்றாண்டுகள் செல்லும். அதற்கு முன்னைய இடைக்கட்டமே சோசலிச சமூக அமைப்பு இக்காலகட்டத்தில் படிப்படியாக மூன்றும் வேகமாக உதிரும் காலகட்டம் ஆகும். இக்காலகட்டம் சிலநூற்றாண்டுகள் செல்லலாம். இது சிலரின் விருப்பத்தில் இருந்து வரும் கற்பனையல்ல. பல்லாயிரம் வருடங்களாக மனித சமூகம் எப்படி மாறியதில் இருந்து எதிர்காலம் எப்படி மாறும் என்ற கணிப்பு.
மனிதன் ஏனைய விலங்குகளை விட சுதந்திர உணர்வு உடையவன். அந்த உணர்வே போராட வைக்கிறது. மனித சமூகம் பிளவுபட்டு ஆதிக்க சக்திகளாகவும் ஆளப்படும் சத்திகளாகவும் மாறிய காலத்தில் இருந்தே இந்தபிளவுக்குகெதிரான போராட்டமும் ஆரம்பமாகிவிட்டது. இது போராட்டம் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஆழும் தரப்பு ஆண்டானாக, நிலப்பிரபுவாக,முதலாளியாக மாறிய அதே வேளை ஆழப்படும் தரப்பும் அடிமையாக, பண்ணை அடிமையாக, தொழிலாளியாக மாற்றம் பெற்றுவிட்டது. இந்த மாற்றம் இலகுவாக நடக்கவில்லை பல்லாயிரம் பேரின் போராட்டத்தாலும் உயிர் இளப்பாலுமே நிகழ்ந்தது. இந்த போராட்டத்தின் போக்கில் ஆழப்படும் தரப்பு அடிமையாக இருந்து தொழிலாளவர்க்கமாக மாறியபோது பல சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டார்கள். இன்னும் ஆழப்படும் தரப்பு பெறவேண்டிய உரிமைகளும் சுதந்திரமும் நிறைய இருக்கின்றன. உரிமைகளும் சுதந்திரமும் நிறைவடையும்போது ஆழும் தரப்பு இல்லாமலே போய்விடும் அக்காலகட்டமே கம்யூனிச சமூகம் ஆகும். இச்சமுகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் கொட்டிக்கிடக்கும் சொத்துக்களுக்கு பங்காளி ஆகிவிடுகிறது.
இன்றைய ஆழும் தரப்பின் தேவைக்காகவே உலகம், நாடுகள் என்ற பெயரில் பலகூறூகளாகா பிளக்கப்பட்டு ஆழப்படுகிறது. ஆழும்தரப்பின் போட்டியினாலேயே யுத்தங்கள் நிகழ்கின்றன . உற்பத்தி தேவைக்கானது என்பதை புறம்தள்ளி லாபத்துக்கானதாக வெறித்தனமாக இருப்பதால் ஒரு வாழைப்பழத்தைகூட நம்பி வாங்கி சாப்பிட முடியவில்லை. பல தடவை உலகை அளிக்கக்கூடிய ஆயுதங்கள் பெருகியது இதன்வெளிப்பாடே, பலகோடி மக்கள் உணவு கல்வி சுகாதார வசதிகள் இல்லாமல் மடிந்துகொண்டு இருக்கும் சூழலில் குறிப்பிட்ட ஆளூம்தரபினரும் முதலாளிகளும் தங்க கோப்பையில் மலம்கழித்துக்கொண்டு இருக்கிறார்கள் . இவற்றை எல்லாம் மக்கள் சிந்தித்து கேள்வி எழுப்பும் பொது சமூகம் மாறும் . பரம்பரையாக சொத்துக்கள் கடத்தப்படுவதை மக்கள் கேள்விக்கு உள்ளாக்குவர் பாஸ்போட் விசாவை மக்கள் கேள்விக்கு உள்ளாக்குவர். உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் உலகம் எங்கும் வாழ உரிமை உடையவன் என்ற உரிமைக்குரல் எழும். இத்தகைய நிகழ்வுகளுக்கு ஆரம்பபுள்ளியே ஐரோப்பிய ஒன்றியம் .இது மேலும் மேலும் வளற்சியுறும். இவ்வாறு உலகில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிப்பின் மூலமே கம்யூனிசத்தை புரிந்து கொள்ள முடியும்.

Barathy Sivaraja : நாத்திகம்!?!?…
ஒரு சமூக விஞ்ஞான தத்துவ கோட்பாட்டை உலகம் பூராய் உள்ள பல இலட்சம் பேர் உள்வாங்குகிறார்கள். அதை எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்காக அந்த கோட்பாட்டையே அரைவேக்காட்டுத்தனமாக. கேலி செய்வது அது நாத்திகம் அல்ல பைத்தியம்🫣
மத அடிப்படை வாதங்களை எதிர்ப்போர்/ நாத்திகர்கள் என்போர் கொஞ்சம் சமூக பிரஞ்ஞையோடு நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் எப்படி மதங்களில் இருக்கும் போது தீவிரமாக இருந்தார்களோ அதே போல் அதிலிருந்து விலகி நாத்திகத்தில் தீவ்விர போல்கில் உள்ளனர்.
நாத்திக தீவிரம் என்ற பெயரில் ( ஒரு சிலர்) மக்கள் விடுதலைக்காக /ஒடுக்கப்பட்ட வர்க்க,இனங்களுக்காகப் போராடுகிற தத்துவங்களை அடிப்பதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன என்பதே என் சந்தேகம்?!
மத வாதிகளும், வலது சாரிகளும், கமுனிஸத்தை அடிக்கிறார்கள். நாத்திக வாதிகள் நீங்களும்!- என்றால், நீங்கள் யார் என்ற கேள்வி எமக்குள்ளது.
வரலாற்று பொருள்முதல் வாத தத்துவத்தால் கடவுள் மத நம்பிக்கைகளை உடைத்த பெரிய பங்கு மாக்ஸிய இடது சாரிகளுக்கு உண்டு. அதற்குள் இருந்தது மகள் நலன் சார்ந்த அறிவியல்.. எதை எதிர்க்க வேண்டும் எதை வளர்க்க வேண்டும் என்ற அறம் முதலில் அறிவுக்கு தேவை.
வெறும் நாத்திகத்தால் சமூக விடுதலை, வர்க்க விடுதலை, பெண் மற்றும் மாறு பாலினத்தார் விடுதலை எதையும் பெற்றுத் தந்து விட முடியாது. மக்களின் வறுமையும் ஒடுக்குமுறைகளை எதிர் நோக்குகிற வாழ்வும் திரும்பவும் அவர்களை(மக்களை) தாக்கும். தீவிரமாக அதற்குள் மீளவும் தள்ளும்.
இம்மக்கள் எதிர் நோக்குகிற பிரச்சனைகளைக் கூட சிந்திக்கத் துப்பில்லாத நாத்திகத்தால் பலன் என்ன? அது வலதுசாரிகளுக்கு அடி கழுவி விடுகிற ஆபத்தில் போய் நிற்கிறது. இது மதத்தை விட ஆபத்தானது.
மத நம்பிக்கை சமூகப் பிரச்சனைகளை எதிர் கொண்டு பகுத்தறிந்து போராட்ட குணத்தை அழித்துவிட அதன் கருத்து முதல் வாதப் போக்கு பெரும் பங்களிக்கிறது என்பதால் அதை நாம் எதிர்க்கிறோம் அல்லது மறுக்கிறோம். ஆனால் இதன் எந்த புரிதலும் அற்று நாத்திகம் நாத்திகம் என்றால் யாருக்கு என்ன பயன்!!
இயற்கை விஞ்ஞானம் -நாத்திகமோ தேவை இல்லை என்பது இல்லை, அவை மிக மிக முக்கியம். ஆனால் அதனால் மட்டும் மக்களின் விடுதலையைப் பேசிவிட, போராட முடியாது. ஏன் என்றால் இவை வலது சாரிய ஆளும் வர்க்கத்தால் இன்றைய நிலையில் ஆளப்படுகின்றன.
எனவே, மக்கள் விடுதலைக்காகப் போராட- அதைப் புரிந்து கொள்ள மார்க்சியம் என்ற தத்துவம் அவசியம் தேவைப்படுகிறது. நாத்திகம் அதற்கு மாற்றாக ஒரு சமூக விஞ்ஞானத்தைக் கண்டு பிடித்து விட்டால் பார்க்கலாம்..
மத அடிப்படை வாதங்கள் தலை தூக்கும் இடங்களில் நாத்திகம் தேவைப்படுகிறது அது பெரியார் பேசிய சமூகத்தைப் புரிந்த, அம்மக்களின் சமூக விடுதலைக்கானது போன்று இருக்க வேண்டும். அதை விடுத்து தன்னை முன் நிலைப்படுத்துகின்ற சமுக அரசியல் அறிவியல் அற்ற வறட்சியானதாக இருக்கக் கூடாது!!
சோசலிஸ்டுகளை-கமுனிஸ்டுகளை அடிப்பதற்கு பின்னால் ஆபத்தான ஆதிக்க வர்க்க அடி கழுவல் இருந்தால் வாருங்கள் வந்து மருந்து போட்டுக் கொள்ளுங்கள். அந்த கைகளால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது பிடுங்க முயலும் ஆணியில் நாற்றம்தான் அடிக்கும்🙄

Rishvin Ismath : Barathy Sivaraja கம்யூனிசம் விமர்சிக்கப்படவே கூடாது என்று கம்யூனிஸ்ட்டுகள் எதிர்பார்க்கின்றார்கள். விமர்சனங்கள், கேள்விகளைக் கூட தாங்க கம்யூனிசத்திற்கு சக்தி இல்லாததால் தான் கம்யூனிச அராஜக ஆட்சிகளின் கீழ் இவ்வளவு படுகொலைகள் நடந்திருக்கின்றன. மக்களே வெற… See more

Barathy Sivaraja : Rishvin Ismath நீங்கள அவர்களை கேள்வி கேட்பதை விட்டுட்டு கமுனிசத்தை அடிப்பதில் பக்கா உள் நோக்கம் இருக்கு என்று நினைக்க எல்லா சாத்திய கூறுகளும் உண்டு.

Rishvin Ismath  : Barathy Sivaraja பச்சையில் காட்டியுள்ள இடம் தெளிவில்லாமல் இருக்கின்றது.
May be an image of text that says '- Barathy Sivaraja Rishvin Ismath நீங்கள அவர்களை கேள்வி கேட்பதை விட்டுட்டு கமுனிசத்தை கமுனி மக்கள அடிப்பதில் பக்கா உள் நோக்கம் இருக்கு என்று நினைக்க எல்லா சாத்திய கூறுகளும் உண்டு.'

Kinniya Shabeer : Santhirapalan Saminathar Communism Islam Christianity Capitalism Nazism இப்படி எந்தவொரு ideology யும் சரிவராது என்பது தான் எனது நிலைப்பாடு, adam ஸ்மித் சொன்ன முதலாலிதுவம் என்ற கோட்பாடு இப்போது எங்குமே நடைமுறையில் இல்லை, அதே போல தான் கார்ல் மார்க்ஸ் சொன்ன கம்யூனிசம் நடைமுறைக்கு பொருந்தாது.. ஒன்றில் இருக்கும் சிக்கலை மற்றொண்டின் அல்லது வேறு idea களின் உதவியுடன் விஞ்சான முறையில் நிவர்த்தி செய்வதே சரி என்று என்னுகிறேன்,
Prof. John nash சொன்னது போல.
"If things are not so good or fair, you maybe want to imagine something better"
இப்படி ஒரு கற்பனையின் அடிப்படையில் உருவானது தான் communism என்ற utopia, அதை அடைய நினைக்கும் மனம் சுவர்க்கத்தையும், இறுதி நியாய தீர்ப்பு நாளயும் அடைய நினைக்கும் மதவாதிகளுக்கு சமம்.. எல்லா கற்பனைகளும் practical என்று சொல்ல முடியாது..
கார்ல் மார்க்ஸ் சொன்ன எத்தனாயோ விடயங்கள் இன்று சட்டங்களிலும் சமூகங்களிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது என்பதை நான் மறுக்க வில்லை, அதே நேரம் அந்த commuist state ஐ அடைவதற்காக எத்தனையோ கொலைகளும் அடக்கு முறைகளும் நடந்துள்ளது என்பதையும் அந்த நிலையை அடைய இதுவரை எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியிலும் கஷ்டதிலும் முடிந்துள்ளன ( முஸ்லிம்கள் islamic state ஐ நிறுவ முயற்சித்தது போல) அதனால் 100% அதை அடைவது சாத்தியம் இல்லை என்பதையும் ஏற்றுக்குக் கொள்ள தான் வேண்டும்..
இறுதியாக
தனது மார்க்கம்/ ideology (Islam/ Communism) மட்டுமே சரி என்று முஸ்லிம்களும் கம்யூனிஸ்டுகளும் சொன்னால் அது இறுதியில் மூர்க்கம் ஆகிவிடும் என்பதே
உண்மை.. எந்தவொரு ideology உம் விஞ்சானம் கிடையாது, கீழே குறிப்பிட்டது போல அது முட்டாள்களின் விஞ்சானமாக இருக்கலாம், அதை உணர்ந்தலே போதும்..
May be an image of 1 person and text that says 'Ideology is the science of diots. ~John Adams AZQUOTES'

Rishvin Ismath :  Kinniya Shabeer எனது கருத்தும் இதை ஒத்ததாகவே இருக்கின்றது.

Kinniya Shabeer  : Barathy Sivaraja கோட்பாடுகள் நன்றாக இருந்து என்ன பயன் practical இல் failure என்றால்.. முதலில் communism practically possible என நிறுவ முடியுமா? முடிந்தால் நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்..
சமூக அக்கறை இருக்க போய் தானே இவ்வாறான மாய விம்ப சிவப்பு சித்தாந்தங்களையும் அவற்றின் influence ஆல் தோன்றிய கொலைகள், அடக்கு முறைகளையும் அவற்றை புனிதமாக போற்றும் சிவப்பு சட்டை காரர்களையும் கேள்விகேட்கிறோம்?
உங்கள் பதிவு என்னமோ marxism வருவதற்கு முன்னர் மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை / அடக்கு முறை /அதிகாரம்/ ஆணவ எதிர்ப்பு இல்லை என்பது போல் உள்ளது.. முஹம்மது வருவதற்கு முன்னர் அரபிகள் முட்டாள்களாக இருந்தார்கள் முஹம்மத் தான் அவர்களை அறிவாளியாக்கினர் என்று முஸ்லிம்கள் சொல்வது போல் உள்ளது..
இஸ்லாம், capitalism, Communism, எல்லாம் ideology தான், யாரும் அதை எதிர்த்து கேள்வி கேட்கலாம்.. அது 100 வீதம் சரியானது, புனிதமானது, மக்களின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என immune கொடுக்க தேவையில்லை.. கம்யூனிசத்தை criticize செய்வது வலது சாரியதை ஆதரிப்பது என்று அர்த்தமில்லை,
நீங்கள் சொல்லும் social science உம் (natural) சைன்ஸ் இன் இப்போதைய ஒரு பகுதிதான்..
(ஆனால் அவை சமாபந்தமான வாத பிரதி வாதங்களும் உள்ளன)
சில authorities science ஐ கன்ட்ரோல் செய்வதால் science என்பது வலது சாரிகளின் கொள்கை, or science is an ideology என சொல்ல முடியாது, இங்கே சில communist கள் சொல்வது போல..
கம்யூனிசத்தை உலகம் பூராகவும் பலர் தெளிவாக புரிந்து கொள்ளாமல் உள்வாங்குகிறார்கள், இதன் அர்த்தம் என்ன?
communism என்பது ஒரு ideology/மதம் தான், நீருபிக்கபட்ட விஞ்ஞானம் இல்லை..
நாத்திகம் என்பது மாதங்கள் கடவுள்களை பலங்கால சமூகம் உருவாக்குவதற்கு முன்னிருந்த எல்லா மனிதர்களினதும் நிலைதான், எங்களை நாத்கர்கள் என்று label குத்தி சிறப்பு அடையாள படுத்ததேவை இல்லை..
//இவர்கள் எப்படி மதங்களில் இருக்கும் போது தீவிரமாக இருந்தார்களோ அதே போல் அதிலிருந்து விலகி நாதிகத்தில் தீவிர போக்கில் உள்ளனர்// யாரு உங்களு இப்படி சொன்னது? கார்ல் மார்க்ஸ் ஆ இல்லை islamic apologists ஆ?
How did you take this assumption? As u taken communism is the only solution to everything?

நான் பார்த்த வரையில் communism என்பது 20ஆம் நூற்றாண்டின் இஸ்லாம் தான், கொலைக்கார முஹம்மதுவை போற்றி புகளும் முஸ்லிம்கள் போல கொலைகார mao, ஸ்டாலின் போன்றோரை போற்றும்
கம்யூனஸ்டுகலும் ஒருவகயில் மதவாதிகலே. 1400 வருடங்கள் பழமையான இஸ்லாமிய ஆணியையே புடுங்கி வெளியேறிவிட்டார், இந்த 150 வருடங்கள் பலய கம்யூனிச ஆணியை பபுடுங்குவது என்ன கஷ்டமா?

கருத்துகள் இல்லை: