ராதா மனோகர் : தமிழ்நாட்டு அரசியல் ஒரு கொதிநிலை
அரசியலாக மாறிக்கொண்டு வருவது போல தோன்றுகிறது.படித்தவர்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இந்த கொதிநிலை அரசியல் ஏற்புடையதல்ல.
எந்த விடயத்தை பற்றி பேச தொடங்கினாலும் அது ஒரு அடிப்படை வாதத்திற்குள் போய் நிற்கிறது.
அதனால் நியாயமாக பேசவேண்டிய பல விடயங்களை பேசாமல் கடந்து போகவேண்டிய நிலை ஏற்படுகிறது
குறிப்பாக திமுக அரசு மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல நல்ல விடயங்களை பாராட்ட வேண்டித்த்தான் இருக்கிறது.
ஆனாலும் இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது
தவறை தவறென்றும் கூறினால் உடனே அவரை ஒரு எதிரியாக்கும் மனோபாவம் வளர்ந்து வருகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது
மறுபுறத்தில் நல்ல விடயங்களை மனப்பூர்வமாக பாராட்டி விட்டாலும் உடனே இவர் சொம்பு தூக்குகிறார். ஏதோ ஒரு பயனை வேண்டி பாடுகிறார் என்றெல்லாம் கருதி விடக்கூடிய அளவுக்கு பஜனைகளும் உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது.
அதிமுக போன்ற கட்சிகளின் கெமிஸ்ட்ரியோடு திமுகவை ஒப்பிட்டு பார்க்க முடியாது
உண்மையில் திமுகவின் எதிர்க்கட்சியாக திமுகவினரேதான் இருக்கிறார்கள்
இதுதான் திமுகவின் ஜனநாயக பண்பு இதுதான் திமுகவின் பாரம்பரியம்
கேள்வி கேட்டு வளர்ந்த இயக்கம்தான் திமுக.
ஆனால் இந்த கருத்தை இன்று எத்தனை திமுக ஆதரவாளர் புரிந்து வைத்துள்ளார்கள்?
இந்த கருத்தை உடனே புறந்தள்ளாது ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
எதிரே எதிரிகள் இல்லை என்று ஒருபோதும் எண்ணிவிட கூடாது
சுயமரியாதை இயக்கத்தின் எதிரிகள் எந்தெந்த உருவத்தில் எப்போதெல்லாம் வருவார்கள் என்பதை ஜோசியமா பார்க்கமுடியும்?
திமுகவின் ஆதாரமாக இன்றும் கூட இருப்பது திராவிட கொள்கைகள்தான் .
அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்
சுயமரியாதை சமூகநீதி சுயசிந்தனை ஆகிய திராவிட இயலில் இருந்து திமுக விலகி போகாதவரைக்கும் இன்னும் பல தலைமுறைகளுக்கு தமிழ்நாட்டை திமுகதான் ஆளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக