இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இடது சாரி இயக்கங்கள் இலங்கையில் வேகமாக காலூன்றின குறிப்பாக மலையகத்தில் . பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் மலையக மக்களின் வாக்குகளிலும் ஏனைய சிறுபான்மையின மக்களின் வாக்குகளிலுமே தங்கள் அரசியல் மேடையை அமைத்துக்கொண்டார்கள். இந்த பின்னணியில் சில விடயங்களை ஆய்வு செய்தல் அவசியம்.
ராதா மனோகர் : இலங்கை சிங்கள இடதுசாரிகள் சிங்கள
A.E.Gunasinga |
தமிழக இடதுசாரி கட்சிகள் இந்த விடயத்தில் இலங்கை சிங்கள இடதுசாரிகளோடு ஒன்றாக வேலை செய்து சிங்கள இடதுசாரிகளின் ் வேலையை இலகுவாக்கினார்கள்
சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் அன்றைய சுதந்திர இலங்கையின் தேசியக்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறமுடியாமல் போனது
மறுபுறத்தில் பல இடதுசாரி கட்சிகள் மலையக மற்றும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்கள் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையோரின் ஆதரவில் வெற்றி பெற்றிருந்தனர்.
பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் வெற்றி பெற்றது இந்த வாக்குகளால்தான்
அன்றே மலையக மக்கள் மீது ஒரு கம்யூனிச லேபிளை ஓட்டினார்கள் அந்த இடதுசாரிகள்
இதன் காரணமாக அவர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டது . இதன் பின்னணியில் இந்திய அமெரிக்க பிரித்தானிய போன்ற பலகட்சி ஜனநாயக நாடுகள் இயங்கின .
மறுபுறத்தில் கம்யூனிச சர்வாதிகார நாடுகள் தெற்கு ஆசியாவில் ஒரு கம்யூனிச நாடு உருவாகும் என்ற கனவுலகில் மிதந்தன.
1970 ஜேவிபி கிளர்ச்சியின் போது வடகொரியா ஆயுதங்கள் பிடிபட்டதாக செய்திகள் வந்தன.
அந்த நேரத்தில் உடனடியாக இந்திய அரசு ஸ்ரீ மாவோ அரசை காப்பாற்றிய வரலாற்று செய்தியையும் இந்த இடத்தில் ஞாபக படுத்த வேண்டும்
இன்னொரு புறத்தில் கம்யூனிச சோஷலிச இடது சாரி கருத்துக்களை மலையக மக்கள் மீது சூப்பர் இம்போஸ் செய்த இடது சாரிகள்,
காலப்போக்கில் சிங்கள இனவாதிகளாகவே பச்சோந்திகளாக உருமாறினார்
அன்றைய A.E.குணசிங்கா கொல்வின் பீட்டர் கெனமன் முதல் இன்றய விமல் வீரவன்சா, வாசுதேவா நாணயக்கார வரைக்கும் இதுதான் வரலாறு.
ஒரு சிறு பிளாஷ் பேக் : கோயம்புத்தூர் மில் தொழிலார்களின் தொழிற்சங்க பிரசாரத்திற்கு கோவை வந்த
திரு பிலிப் குணவர்த்தன, கொல்வின் ஆர் டி சில்வா . லெஸ்லி குணவர்தனவின் மைத்துனர் அந்தோணி பிள்ளையும் கரோலின் குணவர்தனாவும் ( இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் மைத்துனி)
இந்தியாவிலே நிரந்தரமாக தங்கிவிட்டனர்
அது மட்டுமல்ல கரோலினின் கணவர் அந்தோனிப்பிள்ளை சென்னை சூளை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் பின்பு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் இ வி கே சம்பத்தின் தனிக்கட்சியில் சேர்ந்தார் அடுத்த பாய்ச்சலாக சம்பத்தோடு சேர்ந்து இந்திரா காங்கிரசில் ஐக்கியமானார்
காங்கிரஸ் சார்பில் வடசென்னையில் இரண்டாவது முறை நின்று தோல்வி அடைந்தார்
ஆனாலும் என்ன வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் தயவில் பல பெரிய பதவிகளில் இருந்தார்
இவர் இறக்கும் போது சென்னை துறைமுக இயக்குனர் சபையின் அங்கத்தவராக இருந்தார்
இவரின் மனைவி கரோலின் குணவர்தன நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்
இவரின் இறுதி நிகழ்வுகள் குணவர்தன குடும்பத்தில் பொரலகொட (இலங்கை) பண்ணை வீட்டில் நடந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக