வெள்ளி, 28 அக்டோபர், 2022

சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சதீஷ் வாக்குமூலம் | Student Sathya Murder Case

tamil.oneindia.com -  Hemavandhana  :  சென்னை: சத்யாவை திட்டமிட்டே ரயில்முன் தள்ளி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.. சில நாட்களுக்கு முன்பு, ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்தார் சதீஷ்..
இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.தலைமறைவாக இருந்த கொலையாளி சதீஷை போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு புழலில் கொண்டுபோய் அடைத்தனர்.. சத்யாவுக்கு 14 வயது இருக்கும்போதே, தன் காதல் வேலையை ஆரம்பித்தாராம் சதீஷ்.. பின்னாடியே அவரை விரட்டி விரட்டி சென்று காதல் செய்வதாக சொல்லியுள்ளார்.. இந்த விஷயம் சதீஷின் அப்பாவுக்கு அப்போதே தெரிந்தும், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த அவர், தன் மகனை ஒருநாளும் கண்டிக்கவில்லை என்கிறார்கள்.

போதாக்குறைக்கு, கை நிறைய பணம் சதீஷிடம் புழங்கி வந்துள்ள நிலையில், பெற்றோர் கண்டிக்காமல் விட்டதும், கடைசியில் போதை பழக்கம்வரை கொண்டு போய் நிறுத்தியுள்ளது.. தினமும் காலேஜ் முடிந்து சத்யா சாயங்காலம் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அங்கிருக்கும் ஒரு மெக்கானி கடையில் சதீஷ் காத்துக் கொண்டே இருப்பாராம்.. போலீஸ்காரர் வீட்டு பிள்ளை என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மற்ற போலீசாரும் சதீஷின் சேட்டைகளை கண்டுகொள்ளாமல் இருந்தாக கூறுகிறார்கள்.

ஊதாரி
3 மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு லவ் டார்ச்சர் தரும்போதுகூட, காலேஜ் வாசலிலேயே சத்யாவின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.. கிட்டத்தட்ட அப்போதே இவர் ஒரு சைக்கோ போல நடந்து கொண்டதாக நேரடியாக சம்பவத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.. சம்பவத்தன்று, சத்யா தன்னுடைய தோழிகளுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அதை தூரமாக நின்று நோட்டமிட்டு வந்துள்ளார்.. செல்போனில் பேசுவதைபோல தூரமாக நின்றுகொண்டே சத்யாவை கண்காணித்து கொண்டே இருந்துள்ளார்..

ட்ரெயின்
ட்ரெயின் கிட்ட வருவது தெரிந்துதான், செத்து போ என்று சொல்லி கொண்டே சத்யாவை தள்ளி விட்டிருக்கிறார்.... சத்யாவுக்கு டார்ச்சர் தந்ததால், போலீசில் ஏற்கனவே 3 முறை சத்யா வீட்டில் புகார் தந்தார்களாம்.. ஆனால், போலீஸார், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்காமல், 2 தரப்பினரையும் அழைத்து பேசி கட்டப்பஞ்சாயத்து செய்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்களாம்.. இதுதான் மிகப்பெரிய சிக்கலை காவல்துறைக்கு எழுப்பியது..

ஆக்‌ஷன்
இந்நிலையில்தான், சதீஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்தனர்.. சென்னை புழல் சிறையிலிருந்து பாதுகாப்பாக சதீஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்... பிறகு, கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று, அவரை நடித்து காட்ட சொன்னார்கள் போலீஸார்கள்.. இறுதியில், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு விசாரணைகளையும் நடத்தினார்கள். அப்போதுதான், சத்யாவை திட்டமிட்டே ரயில்முன் தள்ளி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூமில் சத்யா பேயர்
" நாங்கள் 2 பேருமே காதலித்து வந்தோம்.. நான் படிக்கவில்லை, ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை என்பதற்காக சத்யா ஒருநாளும் என்மீது கோபப்பட்டது கிடையாது.. என்னுடைய ரூம் முழுக்க சத்யாவின் பெயரை வைத்திருக்கிறேன்.. என்னுடன் பழகுவது பிடிக்காத சத்யாவின் அம்மா, வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்.. அதனால் என்னிடம் சத்யா பேசவில்லை.. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் பேசாத ஆத்திரத்தில்தான் ரயில் முன்பு தள்ளிவிட்டேன்.. ஆனால் சத்யா இறந்துவிடுவார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.. ரயில் முன்பு தள்ளிவிட்டதால் காயமடைந்திருப்பார் என்று தான் நினைத்தேன்.. சத்யா இறந்துவிட்ட விஷயமே எனக்கு தெரியாது.

சத்யா சத்யா
சத்யாவை அவர் படித்த காலேஜ் வாசலுக்கே சென்று தாக்கினேன்.. போலீசில் அது தொடர்பாக புகாரளித்தபோது கூட எனக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை... ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் செய்து வைக்க அவரது வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது கேள்விப்பட்டதும்தான், அவரை கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன்.. இதற்காக 2 நாட்கள் சத்யாவை பின்னாடியே ஃபாலோ செய்தேன்" என்றார். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று, சத்யாவை கொலை செய்தது எப்படி என்பதை நடித்து காட்ட செய்து அதை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.. அதேபோல, சதீஷ் அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து கொண்டு, மீண்டும் பத்திரமாக புழலில் கொண்டுபோய் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: