செவ்வாய், 7 ஜூன், 2022

சவுதி அரேபிய பெண் விமானிகள் ஒட்டிய எயர்பஸ் A320 விமானம்

Rishvin Ismath : சவுதி அரேபியாவின் சாதாரண கட்டண விமான சேவையான ஃப்ளைஎடீல் இற்குச் சொந்தமான எயர்பஸ் A320 விமானம் கடந்த வியாழக்கிழமை (19 ஆம் திகதி) ரியாத் இலிருந்து ஜித்தாவுக்கு வெற்றிகரமாகப் பறந்து சென்றுள்ளது.
ஒரு விமானம் பறந்த செய்தி முக்கியத்துவம் பெறக் காரணம், குறித்த விமானம் முழுமையாக (முஸ்லிம்) பெண்களால் இயக்கப் பட்டமையே ஆகும்.
'பெண்களுக்கு அறிவில் குறைபாடு இருக்கின்றது, நெருங்கிய உறவினரான ஆண் துணை இல்லாமல் பெண் வெளியே செல்லக் கூடாது,
நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்லும் பெண் விபச்சாரி,  பெண்ணின் சாட்சி ஆணின் சாட்சியின் பாதிக்குத்தான் பெறுமதி, ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு சொத்துத்தான் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்,
ஒரு ஆண் ஒரே தடவையில் 4 பெண்களை மனைவிகளாகவும், எண்ணற்ற பெண்களைப் பாலியல் அடிமைகளாகவும் வைத்துக் கொள்ளலாம்,
பெண்கள் விளை நிலங்கள், விளை நிலங்களுக்கு விரும்பிய படி விதைக்கச் (செக்ஸ் செய்யச்) செல்லுங்கள்' ( http://www.allahvin.com/2021/03/women.html ) என்றெல்லாம் பெண் வெறுப்பையும்,
பிற்போக்குத் தனத்தையும் தாராளமாகப் போதிக்கும் இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகரான முஹம்மது நபி பிறந்த மண்ணான சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று முதல் தடவையாக பெண்களால் மட்டும் இயக்கப் பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது,

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கன்னத்தில் செருப்பால் ஓங்கி அடித்ததற்கு ஒப்பான ஒன்றாகும்.
விமானத்தை இயக்கிய, அதில் பணியாற்றிய பெண்களின் புகைப்படங்களை ஃப்ளைஎடீல் விமான நிறுவனம் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஹிஜாப் இல்லாமல், 'ஹிஜாபாவது, மயிராவது' என்று தலையைத் திறந்து கொண்டு திமிராகப் போஸ் கொடுக்கின்றார்கள். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் வரை பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று நிர்ப்பந்தித்துக் கொண்டு இருந்த நாடு இன்று வேகமாக முன்னேறி இருக்கின்றது.  
விமானத்தின் கப்டனைத் தவிர மற்ற அனைத்துப் பெண்களும் சவுதி நாட்டவர்கள். சவுதி அரேபியாவின் வயதில் குறைந்த விமானியான 23 வயதுப் பெண் யாராஜான் (தனிப் படத்தில் இருப்பவர்) இந்தப் பறத்தலின் பொழுது துணை விமானியாக கடமையாற்றி இருக்கின்றார். அவரும் கூட ஹிஜாப் அணிபவர் அல்ல.

கருத்துகள் இல்லை: