சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆவணப்பட (கக்கூஸ்) இயக்குனர் திவ்வியா பாரதியின் பாஸ்போர்ட் தடை நீங்கியது

May be an image of text
May be an image of 2 people and people standing

Divya Bharathi :  விளிம்புநிலை மக்களுக்கான எனது தொடர் போராட்டங்களுக்காக 2009ல் இருந்து என் மீது தொடரப்பட்ட வழக்குகளால்
 2016 ல் எனக்கு Passport மறுக்கப்பட்டது.
அன்றிலிருந்து துவங்கிய போராட்டம் சென்ற வாரம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடிவுக்கு வந்தது.
ஆம் மதிப்பிற்குரிய நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் அவர்கள் எனது பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்குள் தர சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்.
எனது ஆவணப்படங்களுக்கு அரசு தொடுத்த பெரிய பொய் வழக்குகள்  அனைத்தையும் முடித்து விட்டாலும், 2009ல் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது தலித் மாணவர்களுக்கான அரசு விடுதியில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதை கண்டித்தும் தலித் மாணவர் விடுதிகளை தரம் உயர்த்த கோரியும் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறி என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை காரணம் காட்டி மீண்டும் பாஸ்போர்ட் இரண்டு மாதங்களுக்கு முன் மறுக்கப்பட்டது.
பாஸ்போர்ட் இல்லாத ஒற்றை காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தவறவிட்டு வருகிறேன்.

அதற்கு எதிராக வழக்கறிஞர் தோழர் Robert Chandrakumar அவர்கள் எனக்காக தொடுத்த வழக்கில் தான் இந்ந மிக முக்கியமான தீர்ப்பு கிடைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக இதை தனி கவனமெடுத்து வழக்கு நடத்தி வெற்றி பெற்றதோடு நான் பறப்பதற்கு சிறகையும் தந்திருக்கும் இராபர்ட் தோழர் அவர்களுக்கு எப்போதும் என் பேரன்பு.
நீதிமன்ற உத்தரவை வெளியுறவு துறை அமைச்சகம் மதிக்கும் என நம்புகிறோம். இதற்கு உதவியாக இருந்த அத்துனை பேருக்கும் என் அன்பும் நன்றியும்.வழக்கறிஞர் Jeya Mohan அவர்களுக்கு கூடுதல் நன்றி.
The Hindu மற்றும் Times of india பத்திரிக்கையில் வந்த செய்தி. நன்றி

கருத்துகள் இல்லை: