

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த அக்டோபர் 18-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜூனியர் பாலகிருஷ்ணா என்றழைக்கப்படும் கோகுல் சாய்கிருஷ்ணாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் கோகுல் சாய்கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம் குறித்த தகவல், தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினர்களுக்கு தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக