புதன், 7 நவம்பர், 2018

மெரீனா பீச்சில் கொலையான மதுரை கலைச்செல்வி.. ..

போலீசார் பற்றாக்குறையா? பிரேம்குமார் விரைவில் பிடித்து விடுவோம் tamil.oneindia.com/authors/hemavandhana : சென்னை: நிர்வாண நிலையில் பீச்சில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றியும் இன்னும் கொலையாளி பிடிபடவே இல்லை. ஆனால் செக்ஸ் தகறாரில்தான் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீச்சில் நீச்சல் குளம் பின்பக்கத்தில் 2 நாய்கள் சண்டையிட்டும், குறிப்பிட்ட இடத்தில் பள்ளத்தை நோண்டியபடியும் இருந்ததால் அந்த பக்கமாக வாக்கிங் போனவர்கள் அருகில் சென்று பார்த்தார்கள். அங்கே ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து உடல் மீது பாதி மணலை போட்டு மூடி இருந்ததும் தெரியவந்தது. மேலும் பெண்ணின் முகமெல்லாம் காயங்களும், மூக்கில் இருந்து ரத்தமுமாய் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்க அவர்களும் விரைந்து வந்தனர்.
 பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்து பார்த்தால், அவர் நிர்வாண நிலையில் கிடந்துள்ளார். கழுத்து, மார்பு பகுதிகளில் படுகாயங்கள் இருந்துள்ளன. அருகில் ஆண் செருப்புகளும், மதுபாட்டில்களும், பெண்ணின் செல்போனும் இருந்தன. இதையடுத்து விசாரணையை தீவிரமாக துவக்கினர். கொலை செய்யப்பட்ட பெண், 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் பெயர் கலைச்செல்வி என்பதும், சொந்த ஊர் மதுரை என்பதும் தெரியவந்தது.

பாலியல் தொழில் பாலியல் தொழில் இவர் பாலியல் தொழில் செய்பவராம். அடிக்கடி மதுரையிலிருந்து சென்னைக்கு வருவாராம். எப்பவுமே பீச்சில் சுற்றிக் கொண்டே இருப்பாராம். இவருக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு கலைச்செல்வி சென்னை வந்து 2 மாதமாகிறதாம். சென்னை வரும்போதெல்லாம் பிரேம்குமார் என்ற ஆட்டோ டிரைவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

 சம்பவத்தன்றும் இப்படித்தான் அவரிடம் பேசியிருக்கிறார். அதனால் அந்த ஆட்டோ டிரைவரையும், அவருடைய நண்பர்கள் இன்னும் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செக்ஸ் தகராறில்தான் கலைச்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனாலும் கொலையை செய்தது பிரேம்குமாரும் அவரது நண்பர்களும்தானா என்பதை உறுதியாக போலீசாரால் சொல்ல முடியவில்லை. கொலை நடந்து 3 நாள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையே உள்ளது.

இப்படி விசாரணையின் தொய்வுக்கு முக்கிய காரணம், கொலை செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி காமிராவே இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த பெண்ணின் பழைய மாடல் செல்போன் நம்பர்களை வைத்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது விரைவில் பிடித்து விடுவோம் விரைவில் பிடித்து விடுவோம் மேலும் இரவு மற்றும் விடிகாலை நேரங்களில் லைட் வெளிச்சமும் மங்கலாகவே இருப்பதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் இதை தங்களுக்கு ஈசியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். எனினும் இந்த கலைச்செல்வியை கொன்றவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். போலீசார் பற்றாக்குறையா?


 போலீசார் பற்றாக்குறையா? மெரினாவில் சமீக காலமாகவே போலீசாரின் பற்றாக்குறை குறைவாக இருப்பதாகவும், சமூக விரோதிகளின் அட்டகாசம் பெருகி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இங்கு பெருமளவு நடமாடுவதாகவும், கொள்ளை, மது அருந்துதல், உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைககளை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல திருநங்கைகள் உள்ளிட்ட பெண்கள் சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: