வெள்ளி, 9 நவம்பர், 2018

தெலங்கானா..பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றுவோம்

பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும்: தேர்தல் வாக்குறுதிNDTV.com: சமீபத்தில் என்னற்ற நகரங்கள் மற்றும் ரயில் Hyderabad: தென் மாநிலமான ஹைதராபாத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இன்று தெரிவித்தார். கோஷமஹால் தொகுதியின் சார்பில் போட்டியிட்ட ராஜா சிங் செகந்திராபாத்தின் பெயரை கரிம்நகர் என்று மாற்றப்படும் என்று கூறினார்.
நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
1590களின் தொடக்கத்தில் கியூலி குதூப் ஷா ஹைதராபாத்திற்கு வந்தபோது, ஹைதராபாத் பாக்யாநகர் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. எனவே அதே பெயரை மீண்டும் ஹைதராபாத்திற்கு சூட்ட திட்டமிட்டுள்ளதாக ராஜா சிங் கூறினார். தெலுங்கானாவில் பாஜக அமோக வெற்றியடைந்ததும் எங்களுடைய முதல் குறிக்கோள் ஹைதராபாத் என்ற பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவதே ஆகும்.

மேலும் செகந்திராபாத்தின் பெயரை கரிம்நகர் என்று மாற்றுவதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தெலுங்கானாவில் டிசம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
முகலாயர்கள் மற்றும் நிசாம்களின் பெயர்களால் அழைக்கப்படும் நகரங்கள் தெலுங்கானாவிற்காக போராடியவர்களின் பெயர்களால் அழைப்படுமென்று ராஜா சிங் தெரிவித்தார். குஜராத் துணை முதலமைச்சர் நிதின் கட்காரி அகமதாபாத்தின் பெயரை கர்ணாவதி என மாற்றப்போவதாக திட்டமிட்டிருப்பதை அறிவித்ததும், ராஜா சிங் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டார்.
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செவ்வாயன்று பைசாபாத்தின் பெயரை அயோத்திரா என மாற்றலாம் என்று அறிவித்தார்.

COMMENT
சமீபத்தில் என்னற்ற நகரங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. முகல்சாரை ரயில் நிலையம் பண்டித தீனதயாள் உபதயா சந்திப்பு என மாற்றப்பட்டது

கருத்துகள் இல்லை: