சனி, 10 நவம்பர், 2018

மத்திய பிரதேசம் .. திராவிட அரசியலை பின்பற்றி ஏராளமான இலவச உதவி திட்டங்களை அறிவித்த காங்கிரஸ்

சிறப்புச் செய்தி: ம.பி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும், சர்கார் படமும்!*ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசுமடம் அமைக்கப்படும். 
 *விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.
 *விவசாயிகளுக்கு 50 சதவிகித மின் கட்டணம் குறைப்பு. 
 *வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம். 
 *பால் லிட்டருக்கு ரூ.5 போனஸ். 
*வீடற்றவர்களுக்கு, 450 சதுர அடி மனை மற்றும் வீடுகட்ட 2.5 லட்சம் ரூபாய் மானியத்தொகை. 
 *இலவச மருந்து வழங்கல். 
*மத்தியப் பிரதேசத்திலேயே பொருட்கள் தயாரித்தல். 
*தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு. 
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்வு. *பெண்களுக்கு பிஎச்டி வரை இலவச கல்வி. 
பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ .51,000 
பொதுத் தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் 
 *பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை.
 *60 வயதுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் பென்ஷன்..
மின்னம்பலம்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டங்களின் முழுமையான வரலாறு தெரியாமல் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பாளர் கலாநிதிமாறனும் செயல்படுவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

தமிழகத்தைப் பின்பற்றும் மத்தியப் பிரதேசம்
தமிழக அரசு கொடுத்த இலவசத் திட்டங்களுக்கு தமிழகத்தின் முன்னணி நடிகர் எதிர்ப்பு தெரிவித்து படம் எடுத்து, எதிர்ப்புக்குப் பின் அதை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில்தான் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மத்தியப் பிரதேசம் என்னும் மாநிலத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி இன்று (நவம்பர் 10) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில் தமிழக அரசால் பல ஆண்டுகள் முன்பே வழங்கப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித் தொகை, இலவச லேப் டாப் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்கள் பற்றிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இம்மாதம் 28 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக தான் மபியில் ஆட்சி புரிந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் பாஜகவும், காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று (நவம்பர் 10) காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
திருமண உதவித் தொகை, இலவச லேப்டாப்
அதில், தமிழகத்தின் தேர்தல் அறிவிப்புகள் போன்று இலவச லேப்டாப், கலைஞரால் தொடங்கப்பட்ட பெண்களுக்குத் திருமண உதவித் தொகை வழங்கப்படும் திட்டம் போன்ற வாக்குறுதிகளும் இடம் பெற்றுள்ளன. சுமார் 112 பக்கம் கொண்ட அந்தத் தேர்தல் அறிக்கை பட்டியலில் 75 வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
*ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசுமடம் அமைக்கப்படும்.
*விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.
*விவசாயிகளுக்கு 50 சதவிகித மின் கட்டணம் குறைப்பு.
*வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம்.
*பால் லிட்டருக்கு ரூ.5 போனஸ்.
*வீடற்றவர்களுக்கு, 450 சதுர அடி மனை மற்றும் வீடுகட்ட 2.5 லட்சம் ரூபாய் மானியத்தொகை.
*இலவச மருந்து வழங்கல்.
*மத்தியப் பிரதேசத்திலேயே பொருட்கள் தயாரித்தல்.
*தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு.
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்வு.
*பெண்களுக்கு பிஎச்டி வரை இலவச கல்வி.
பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ .51,000

பொதுத் தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்
*பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை.
*60 வயதுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் பென்ஷன் ஆகிய வாக்குறுதிகள் காங்கிரசின் ம.பி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
சர்கார் டீம் படிக்குமா?
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெளியிட்ட இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தமிழகத்தில் திமுக, அதிமுக அரசுகளால் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டவைதான்.
இந்தியாவிலேயே சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டில் முன்னணியில் இருக்கும் மாநிலமான தமிழகத்தின் திட்டங்களையே இன்றைய தேதி வரைக்கும் வட இந்திய, மத்திய இந்திய மாநிலங்கள் நகல் எடுத்து பின்பற்றுகின்றன.
எங்கோ இருக்கும் இந்தி பேசும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு புரிந்த இந்த விஷயங்கள், நமது சென்னையில் இருக்கும் ‘சர்கார்’ படக் குழுவுக்கு புரியாமல் போனது எப்படியோ?
-கவிப்பிரியா

கருத்துகள் இல்லை: