Meshach Robin : இந்த காணொளியை தெளிவாக கேட்டால் நீங்கள் இவர் மீது எதிர்மறையான வாதம் செய்ய மாட்டீர்கள். அவர் நம்மிடம் வைக்கும் ஒரு முக்கியமான கருத்து, "நான் தவறு செய்தால் எனக்கு எதிராக புகார் கொடுக்க சொல்லுங்கள்." இந்த ஒரு வார்த்தையே இவர் நேர்மையான மனிதர் என்பதை காட்டிக் கொடுக்கின்றது.
இவருடைய பேச்சில் தெளிவும், முதிர்ச்சியும் காணப்படுகின்றது. இதைக் காணும் போது உண்மையில் மனம் வலிக்கின்றது. "இங்கு தமிழ் தேசியக் கட்சிகள் எல்லாம் உலகில் உள்ள தமிழ் முதலாளிகளுக்கு மட்டுமே தவிர ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அல்ல" என்று கூறியது எவ்வளவு பெரிய உண்மை. "நியாயம் கிடைக்க வேண்டுமெனில் தற்கொலை செய்து கொள்" என்று அவர் கூறும்போது ஏழையின் உயிர் மட்டுமே ஊடகங்களுக்கு வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது.
பல பேர் இங்கு கத்தி படம் ஃப்லாப்(flop) ஆனால் இவர் வந்திருக்க மாட்டார் என்று கூறுவது முட்டாள்தனமாக உள்ளது. படம் வெளிவறுவதற்கு முன்னரே அவர் நீதிமன்றத்தில் கத்தி கதையை தாக்கல் செய்து விட்டார் என்பதை தெளிவாக உணருங்கள்.
அப்பாடம் ஃப்லாப் (flop) ஆகாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் ஏன்எனில் கதையை திருடுபவர்க்கே இது ஃப்லாப்(flop) ஆகாது நன்றாக ஓடும் என்று உணரும்போது கதைக் களத்தை உருவாக்கியவர்க்கு தெரியாமலா போகும். கொஞ்சம் மனசாட்சியுடனும் , புத்தியுடனும் சிந்தியுங்கள் நண்பர்களே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக