tamil.thehindu.com
சிபிஐயின் தற்போதைய நிலையைக்கண்டு 36 ஆண்டுகள் சிபிஐயில் பணி ஆற்றினேன்
என வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது என்று சிபிஐயின் முன்னாள் இயக்குனர்
ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தலையீடு காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மரியாதை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை பலரும் வைத்துவரும் நிலையில், சமீபகாலமாக சிபிஐ என்கிற அமைப்பில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொலிஜியம் அமைபினால் நியமிக்கப்பட்ட இயக்குனரை நீக்கிவிட்டு அவர் இடத்தில் ஜூனியர் அதிகாரி ஒருவரை நியமித்தது மத்திய அரசு. இதை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டித்தன. ரபேல் விமான ஊழலை விசாரித்ததற்காக இயக்குனரை மாற்றியதாக குற்றச்சாட்டு வைத்தன.
இந்நிலையில் சிபிஐ அமைப்பையும், அமலாக்கத்துறையையும் முழ்ங்கும் அனகோண்டாபோல் பிரதமர் செயல்படுகிறார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சிபிஐ அமைப்பை மையப்படுத்தி நடைபெறும் விவகாரங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் கலந்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “நான் சிபிஐயில் 36 வருடமாக நான் மாநில காவல்துறையில் வேலை செய்யாமல் நேரடியாக 36 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெறும்போது நான் உழைத்த ஒரு நிர்வாகத்தை இப்படி சின்னாபின்னமாக ஆக்குகிறார்களே என்கிற ஆதங்கத்துடன் நான் ரிட்டையர்டு சிபிஐ என்று வெளியே போடுவதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது.”
இவ்வாறு ரகோத்தமன் வேதனையுடன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக