மின்னம்பலம்: தமிழ் சினிமாவில் ஒரு படம் முதல் முறையாக 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆன சாதனையை சர்கார் நிகழ்த்தியிருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர், நடிகர் இவர்களை பொறுத்தவரை இதை சாதனையாக கருதலாம். இவ்வியாபாரம் தமிழ் சினிமா வர்த்தகத்தை மேம்படுத்துமா அல்லது எதிர்காலத்தில் என்ன விதமான சிக்கலை உண்டாக்கும் என்பதே தமிழ் சினிமா வர்த்தக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது, குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதே நேரம் நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக படத்தின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. படம் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடவில்லை. பின் எப்படிக் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்ட படத்தின் வசூல் அதிகரிக்கும், அசல் தேறும் என்கிற கேள்விக்கு இங்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் பதில் கூற இயலவில்லை.
விஜய் நடித்த மெர்சல் தமிழ் நாட்டில் சுமார் 68 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தைத் தயாரிப்பாளருக்கு பெற்றுக் கொடுத்தது. இவ்வசூல் எதிர்பாராத ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனை விட அதிக விலைக்கு சர்கார் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியிருப்பது அனைத்துத் தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நுகர்வோரின் பயன்பாடு தேவைக்கு ஏற்பவே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்கிற வணிக பார்வை சினிமாவில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. அதனால் படம் பார்க்கும் ரசிகன் நியாயத்திற்குப் புறம்பாக அதிக விலை கொடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட நடிகர், இயக்குநர்கள் வாங்கும் சம்பளத்திற்காக ஒட்டுமொத்த சினிமா துறையும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. சர்கார் படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் 40 கோடி. இயக்குநர் முருகதாஸ் சம்பளம் 25 கோடி. ஆக 65 கோடி ரூபாய் இரண்டு தனி நபர்களுக்குக் கிடைக்கிறது.
அதற்காக 550 திரையரங்கு ஊழியர்கள், உரிமையாளர்கள் சட்ட விதி மீறல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. 80 கோடி அசல் விநியோகஸ்தருக்கு கிடைக்க சுமார் 140 கோடி ரூபாய் வரை சர்கார் தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் வசூல் ஆக வேண்டும். அதற்கு சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் சர்கார் திரைப்படத்தை பார்க்க வேண்டும். தமிழகத்தில் ரஜினி உள்ளிட்ட எந்த நடிகரின் படத்தையும் 85 லட்சம் பேருக்கு மேல் இதுவரை பார்த்ததாக ஆதாரங்கள் தமிழ் சினிமா வர்த்தக வட்டாரத்தில் இல்லை.
அப்புறம் எப்படி சர்கார் 180 கோடி வசூலாகும் என்கிற விபரங்கள் நாளை மதியம் 1 மணி பதிப்பில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக