செவ்வாய், 6 நவம்பர், 2018

புதுக்கோட்டையில் 3 வயது சிறுமி நரபலி: அதிக மந்திர சக்திக்காக கழுத்தறுத்துக்கொன்ற பெண் மந்திரவாதி


கொல்லப்பட்ட குழந்தையுடன் தாய்,                       கைதான பெண் மந்திரவாதி
tamilthehindu :புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (30) இவரது மனைவி முருகாயி (26) இவர்களுக்கு மூன்று வயதில் ஷாலினி என்கிற பெண் குழந்தை இருந்தது. கடந்த அக்டோபர் 25-ம் குழந்தை ஷாலினி காணாமல் போனது. பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
காணாமல் போன குழந்தையை தேடியதில் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக வந்த செய்தி பேரிடியாய் இருந்தது. அங்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது ஷாலினி கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் சிறுமி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படாததால் கொலை நடந்ததற்கான காரணம் தெரியாமல் குழம்பினர்.

இந்நிலையில், சிறுமி நகைக்காக கொலை செய்யப்படவில்லை, பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதால் வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர் விசாரணையில் போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்தது. அதே பகுதியில் வசிக்கும் பெண் மந்திரவாதியின் செயல் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்ததால் போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சின்னப்பிள்ளை மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவதும், தனக்கு மேலும் மந்திர சக்தி அதிகரிக்க ஒரு தலைச்சன் குழந்தையை பலிகொடுத்தால் சக்தி கூடும் என்று நம்பியதால் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஷாலினியை நைசாக பேசி அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து கழுத்தறுத்து நரபலி கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து சின்னப்பிள்ளையைக் கைது செய்த போலீஸார் அவரை சிறையிலடைத்தனர்.

கருத்துகள் இல்லை: