வெப்துனியா :கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கைவசம்
இருக்கும் பல துறைகள் தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில்
தற்போது விமான நிலையங்களும் படிப்படியாக தனியாரிகளிடம் ஒப்படைக்கும் பணி
தொடங்கிவிட்டது.
இதன்படி இந்தியாவில் உள்ல ஒருசில விமான நிலையங்களள தனியார்களிடம்
குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக மங்களூரு,
அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6
விமானநிலையங்களை தனியாரிடம் குத்தகைக்குவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.<இதனையடுத்து எதிர்காலத்தில் இன்னும் ஒருசில
விமான நிலையங்களை தனியார்களிடம் குத்தகைக்குவிட வாய்ப்பு இருப்பதாக
கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக