ஞாயிறு, 4 நவம்பர், 2018

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; பாதுகாப்பு படையினர் உள்பட 300 பேர் சிக்கி தவிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; பாதுகாப்பு படையினர் உள்பட 300 பேர் சிக்கி தவிப்புதினத்தந்தி :  ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்பட 300 பேர் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி தவித்தனர். பனிஹல், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் பல நில சரிவுகள் ஏற்பட்டன.  இதனால் தரையில் ஓர் அடிக்கும் கூடுதலாக பனி படர்ந்திருந்தது. இந்த நிலசரிவால் சுரங்க பாதைக்கு மறுபுறம் பயணிகளின் வாகனங்கள் சிக்கி தவித்தன.  தகவல் அறிந்து மீட்பு பணிகள் தொடங்கின.  இதனை அடுத்து 4 பேருந்துகள் உள்பட பல தனியார் வாகனங்கள் பயணிகளை மீட்க அனுப்பப்பட்டன.
 அனைத்து மீட்கப்பட்ட பயணிகளும் பனிஹல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு முகாம்கள், ஓட்டல்கள் மற்றும் மத தலங்களில் தங்க வைக்கப்பட்டனர். 
இதில் ஜம்மு நோக்கி சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனமும் சிக்கி கொண்டது.  அதில் இருந்து வீரர்கள் மீட்கப்பட்டனர்.  அதன்பின் அவர்கள் பனிஹல் நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.<

கருத்துகள் இல்லை: