tamiloneindia :விருந்துக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை அடுத்த பனங்காடி பகுதியைச்
சேர்ந்தவர் அரவிந்த் (22), வருச்சூரைச் சேர்ந்த தன் நெருங்கிய
நண்பர் வீட்டுக்கு கறிவிருந்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.<
நிகழ்ச்சியை முடித்துவிட்டு நண்பர்களுடன்
வீடு திரும்பியுள்ளார். மதுரை- சிவகங்கை சாலையில் விளத்தூர் எனும்
இடத்துக்கு அருகே பைக்கில் அரவிந்த் வந்துகொண்டிருக்கும்போது, 2 சொகுசுக்
கார்களில் வந்த மர்மக் கும்பல் நடுரோட்டில் வழிமறித்துள்ளது.
அப்போது, அந்தக் கும்பல் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அரவிந்த்தைக் கொடூரமாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளது.<;பின்னர் அந்தக் கும்பல், இருசக்கர
வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து அரவிந்த் மீது ஊற்றி எரித்துள்ளது. அந்த வழியாகச் சென்ற பயணிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரவிந்த்தின் சகோதரர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பத்தப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக