திங்கள், 6 ஆகஸ்ட், 2018

புதுசேரி முன்னேற விரும்பினால் என்னை முதல்வர் விமர்சிக்க கூடாது .. கிரண் பேடி அடாவடி ..

புதுச்சேரி: புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் என்னை பற்றி
விமர்சிக்கக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதால் மாநில வளர்ச்சி வேகம் குறையும் என்று அவர் கூறியுள்ளார்.
நக்கீரன் : புதுச்சேரி முன்னேற விரும்பினால், முதலமைச்சர் நாராயணசாமி என்னை பற்றி விமர்சிக்கக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன்னிச்சையாக அதிகாரம் இல்லாத ஆளுநர் ஆய்வு செய்து என்ன பலன்? என்றும் விளம்பரத்திற்காக ஆய்வு செய்து வரும் ஆளுநர், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிவருகிறார். அவர் போட்ட உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதிகாரிகள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: