புதன், 8 ஆகஸ்ட், 2018

சோனியா காந்தி : கலைஞரின் வாழ்க்கை அற்புதமானது ! சமூகநீதி சமத்துவத்தின் பக்கமே நின்றவர் ,

மின்னம்பலம் :திமுக தலைவர் கலைஞரின் மறைவு தனக்குத் தனிப்பட்ட
முறையில் பேரிழப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 2004ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராவதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் எப்படி இந்தியாவின் பிரதமர் ஆவது என விமர்சனங்கள் எழுந்தன. அவற்றிற்குப் பதிலடியாக திமுக தலைவர் கலைஞர் சோனியா காந்தியை ‘தியாகத் திருவிளக்கு’ என்று அடைமொழியுடன் அழைத்தார். மேலும் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கு சோனியா காந்தி பெரும் உறுதுணையாக இருந்தவர். காங்கிரஸும் திமுகவும் அரசியல் களத்தில் இயல்பான நண்பர்கள் என்பதால் திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த சோனியா காந்தி வருவார் என தமிழக காங்கிரஸார் எதிர்பார்த்திருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனியா காந்தியால் பயணம் செய்யமுடியாது என்பதால் அவரால் தமிழகம் வரமுடியாமல் போனது. இந்நிலையில் திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி இன்று (ஆகஸ்ட் 8 ) கடிதம் எழுதியுள்ளார். அதில், “ உங்கள் தந்தை கலைஞரின் மரண செய்தியை கேட்டு துயரம் அடைந்தேன். சமூகத்திற்காக உழைப்பதில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் மிக உயர்ந்த மனிதர் கலைஞர். அவரின் வாழ்க்கை மிக அற்புதமானது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் பக்கமே நின்றவர்.
தமிழகத்தின் சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியவர். பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். தமிழக அரசு மற்றும் அரசியலில் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
கலைஞரின் மரணம் எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். அவரின் கருணையையும் அன்பையும் என்றும் நான் மறக்கமாட்டேன். அவர் எனக்குத் தந்தையை போன்றவர்.
துக்கத்தில் வாடும் உங்களின் குடும்பத்தினருக்காக வேண்டிக் கொள்கிறேன். உங்களின் தந்தை முழு

கருத்துகள் இல்லை: