புதன், 8 ஆகஸ்ட், 2018

கடமை கண்ணியம் கட்டுப்பாடு... திராவிட தொண்டர்களின் எடுத்துகாட்டு

Muralidharan Pb : பசுமையாய் நினைவு இருக்கிறது. இந்திராகாந்தி மரணம்,
அதைவிட எம்ஜிஆர் மரணம். மறக்கவே முடியாத நாட்கள் அது.
எம்ஜிஆர் மரணமடைந்த போது எங்கள் தெருவில் சென்னை பொது மருத்துவமனைக்கு ரொட்டி எடுத்துச் செல்லும் ஒரு வேன் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டது. அன்று அரசியல்வாதிகள் இறந்தால் இப்படித்தான் என்று ஆழமாக பதிந்து போனது. கலைஞர் சிலையை உடைப்பு, அண்ணா சாலையில் கடைகளில் பொருட்கள் சூரையாடல் இன்னும் ஏராளமானவை.
அப்போதைய பேச்சு 'கருணாநிதி செத்தா திமுக காரனுங்க பெரிய ரௌடிப் பசங்க தமிழ்நாட்டை ஒரு வழி பண்ணுவானுங்க என்று பேசியது.
ஆனால் இன்று எந்த பெரிய உயிர் பலியோ, கடைகள் சூறையாடல், அராஜகம் என்று எந்த செய்தியும் வரவில்லை. இத்தனைக்கும் ஆளும் அரசு பொறுமையை காலையில் ரொம்பவே சோதித்து.
இத்தனைக்கும் இன்று மோடி வந்து போன பிறகு போலீசார் நடந்த கொண்ட விதமே அவ்வளவு திருப்தியாக தெரியவில்லை.

ஸ்டாலின் வந்து பேசிய பிறகு அமைதியாக கலைந்து சென்றனர். நல்ல முன்னேற்றம்.
இன்று இரண்டு நற்செய்திகள்.
1. காலத்திற்கு தகுந்தாற்போல் தொண்டர்கள், மக்கள் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது.
2. ஸ்டாலின் பொறுப்பான பெரிய தலைமையாய் உருவாக்கி கொண்டு இருக்கிறார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
வாழ்க அண்ணா, வாழ்க கலைஞர்.
பிகு: இதே அமைதியான தமிழ்நாட்டை ஜெயலலிதா மரணித்த போதும் கண்டேன் என்பதையும் பதிவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை: