ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சென்னை பெண் கொலை 15 வயது சிறுவன் கைது

tamilthehindu :சென்னை அமைந்தகரை பெண் கொலையில் 15 வயது சிறுவனைப் போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்பு (44), இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (35).
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி மதியம் வீட்டில் தமிழ்ச்செல்வி மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பானது.
கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டும் அவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி காமராக்களை ஆய்வு செய்தனர். சிசிடிவி காமர ஆய்வுகளின் படி விசாரித்து வந்த போலீஸார் இன்று 15 வயது உறவுக்காரச் சிறுவனைக் கைது செய்தனர்.
தனது மகளை இந்தச் சிறுவன் காதலித்ததால் தமிழ்ச்செல்வி கண்டித்ததாகவும் அதனால் அவரை இந்தச் சிறுவன் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: