வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

அ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆறுகுட்டி எம்.எல்.ஏ. பேட்டி

kalaignar
arukutty nakkheeran.in/;வே.ராஜவேல் : கோவை மாவட்டம் கள்ளிமடையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி அலுவலகத்தில் வைத்து, திமுக தலைவர் கலைஞர் உருவப்படம் உள்ள அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்து, கருப்பு சட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இதுகுறித்து கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
தமிழகத்தின் கலாச்சாரப்படி ஒருவர் இறந்துவிட்டால் யாராக இருந்தாலும் எதிரியாக நினைக்கக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. அதிமுக சார்பில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நாங்கள் யாரும் போகவில்லை. ஆனால் எங்களுக்கும் அதில் அனுதாபம் உண்டு. அதிமுக உருவாவதற்கு முன்பு கலைஞர் முக்கிய தலைவராக இருந்தவர். அந்த வகையில் கள்ளிமடையில் இளைஞர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை இப்படித்தான் அரசியல் இருக்க வேண்டும். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட இதில் எந்த தவறும் இல்லை. எங்களை இங்கு திமுகவினர் யாரும் அணுகவில்லை. அப்படி அணுகியிருந்தால் நாங்களும் அஞ்சலி செலுத்தியிருப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை: