திங்கள், 6 ஆகஸ்ட், 2018

" திரக்கதா " மறைந்த நடிகை ஸ்ரீ வித்தியாவை பழிவாங்கிய மலையாள திரைப்படம் ..


காத்தவராயர் : சில நாட்களுக்கு முன்பாக திரக்கதா ( திரைக்கதை) மலையாள படம் பார்க்க
நடிகை ஸ்ரீ வித்தியா மிக சிறந்த கலைஞர். தான் ஏற்ற பாத்திர படைப்புக்களுக்கு மிக மிக அதிகமாக சிறப்பு செய்த வெகு சில தமிழ் கலைஞர்களில் ஸ்ரீ வித்தியா மிக முக்கியமானவர். எந்த குப்பை படங்களில் அவர் நடித்து இருந்தாலும் அவற்றின் பாத்திரம் மட்டும் ஞாபகத்தில் இருக்கும் .அதற்கு அவரது பேரழகு மட்டும் காரணம் அல்ல!
அவரது கண்கள் அவர் ஏற்றுகொண்ட பாத்திரம் என்ன சிந்திக்கிறது என்பதையும் காட்டிவிடும்! இந்த திறமை இன்றிருக்கும் எந்த பெரிய நடிகனுக்கும் கிடையாது அதிலும் ரஜினிக்கெல்லாம் சுத்தமாக கிடையாது .

நேரிட்டது.மறைந்த நடிகை ஸ்ரீ வித்தியாவின் வாழ்க்கை வரலாற்றை திரையில் வடித்து உள்ளதாக பெரிய விளம்பரத்தோடு வெளிவந்தது . அதை நம்பி தெரியாத்தனமாக பார்த்து தொலைத்துவிட்டேன் .
அதற்கு காரணம் அவர் உண்மையில் நடிப்பதற்கே பிறந்த ஒரு கலையரசியாக இருந்ததுதான், எடுத்த எடுப்பிலேயே அவரது Majestic அழகு பார்ப்பவரை கவர்ந்து விடுவதால் அவரது நடிப்பு திறமை பெரிதும் பாராட்ட படாமலே போய்விட்டதோ என்று கருதவும் இடமுண்டு.
மறந்து போன ஏராளமான படங்களில் நடித்த ஸ்ரீ வித்தியாதான் இன்றும் கூட அப்படங்களின் முகவரிகளாக இருப்பதை யாரும் மறந்துவிட முடியாது.
திரக்கதா என்ற மலையாள படத்தில் ஸ்ரீ வித்தியாவின் வாழ்க்கை அவரது உலகம் பற்றி அடிப்படை புரிந்தால் இல்லாமல் அவரின் பெயரை பயன் படுத்தி பணம் பண்ணுவதற்கு செய்த மோசமான வியாபாரம்/

ஸ்ரீ வித்தியா தனது மிகப்பெரும் சொத்தாக கருதியது தனக்குள் சுடர் விட்டு பிரகாசித்த கலையும் .. அந்த கலையை உன்னத நடிப்பின் மூலம் வெளிப்படுத்தும் தனது உயர்ந்த தோற்றமும்தான்,
அதனால்தான் அவர் மிகவும் உருக்குலைந்து நடிகை ஸ்ரீ வித்தியாவின் எந்த சுவடும் தெரியாத தனது தோற்றத்தை யாரும் பார்க்க அனுமதிக்க வில்லை .அதில் மிகவும் உறுதியாக இருந்தார். தன்னை படமெடுக்க முயன்றவரிடம் அப்படி எடுத்தல் தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூக்குரல் இட்டு தடுத்தார்.
ஸ்ரீ வித்தியா என்ற பெண் தனது நடிகை ஸ்ரீ வித்தியா என்ற படைப்பின் மீது எந்த தூசியும் விழுவதை சகிக்க முடியாத ஒரு நெருப்பாக இருந்தார்.
இதை புரிந்து கொள்வதற்கு மென்மையான் மனம் வேண்டும் .. கலையுணர்வு என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும் ..
இதெல்லாம் தெரியாமல் வெறும் பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோளாக கொண்ட அந்த மலையாள திரைப்பட உலகம் நடிகை ஸ்ரீ வித்தியா என்ற கலை மேதையை உடைத்து நொறுக்கி இருக்கிறது அந்த திரைப்படத்தில்.
தனது எந்த கோலத்தை உலகம் பார்க்க கூடாது என்று எதற்காக பிடிவாதமாக இறுதி வரை இருந்தார் என்பதை கொஞ்சம் கூட எண்ணி பார்க்கவில்லை அந்த திரை வியாபாரிகள்.
ஸ்ரீ வித்தியாவின் வரலாற்றை காட்டுகிறேன் பேர்வழி என்று புறப்பட்டு ஒரு மோசமான தோற்றத்தை காட்டி உள்ளார்கள் ..
அந்த திரைப்பட கதாசிரியர் , இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம் உண்மையிலேயே பணவெறி பிடித்த மன நோயாளர்கள்தான் ! .

கருத்துகள் இல்லை: