வியாழன், 14 டிசம்பர், 2017

திருச்செந்தூர் மண்டபம் இடிந்து விழுந்து ..பெண் உயிரழப்பு


நக்கீரன் ;திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து:
பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரகார மண்டபம் இன்று காலை 10.45 மணி அளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 15 அடி நீளத்திற்கு மேற்கூரை விழுந்துள்ளது."அங்கு எப்போதும் உள்ளுரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி மோர் விற்றுக்கொண்டிருப்பார். இன்று பிரகார மண்டபம் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புப்பணிகளின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
;தங்கத் தேர் வலம் வருவதற்காக திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பத் தேவர் வெளிப்பிரகாரம் கட்டிக்கொடுத்துள்ளார். 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை சரியாக பராமரிக்கவில்லை. கடலோரமாக இருப்பதால் உப்புக் காற்று படும் என்பதால் அவ்வப்போது பராமரிக்க வேண்டும். பராமரிக்காத காரணத்தினால்தான் தற்போது 15 அடி நீளத்திற்கு விழுந்துள்ளது என்று கோவில் நிர்வாகம் மீதும், தமிழக அறநிலையத்துறை மீதும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை: