அம்ருதா வலியுறுத்துகிற டி.என்.ஏ. பரிசோதனையை, ஜெ. இறந்து ஓராண்டு கடந்த சூழலில் நடத்த முடியுமா என ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் அறிவியல்துறையின் பேராசிரியர் டாக்டர் சம்பத்குமாரிடம் நாம் கேட்டபோது, “"டி.என்.ஏ. பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், வெட்டப்பட்ட நகங்கள் உள்ளிட்டவை டி.என்.ஏ பரிசோதனைக்குப் பயன்படும். இது, மிகவும் "சென்சிட்டிவ்வான கேஸ்' என்பதால் அப்பல்லோ மறுக்கவோ மறைக்கவோ முடியாது'’என்கிறார். ஜெ.வின் மகள் என்கிற அம்ருதா, உண்மையில் ஷைலஜாவின் மகள். ஜெ.வும் ஷைலஜாவும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் என்பதால், ஜெ.வின் டி.என்.ஏ.வும், அம்ருதாவுடையதும் 25% அளவுக்கு ஒத்துப்போக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவத்துறையினர். "அப்படியிருந்தாலும் அது சாதகமான ரிப்போர்ட்டாகாது'' என்கிறார்' டாக்டர் சம்பத்குமார் உறுதியாக.
-மனோசௌந்தர் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக