ஒக்கி புயல் பாதிப்பு: 12நாள் கழித்து முதல்வர் எடப்பாடி
இன்று குமரியில் ஆய்வு
ஒக்கி
புயலால் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார். கடந்த 30ம் தேதி உருவான ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள கடற்கரை பகுதியையும் புரட்டிப் போட்டது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டன. இந்நிலையில் புயல் பாதிப்பு ஏற்பட்டு 12 நாள் கழித்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு துாத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக கன்னியாகுமரி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒக்கி புயல் பாதிப்பை முதல்வர் ஆய்வு செய்யாதது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பயணம் மேற்கொள்கிறார் மின்னம்பலம

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக