dravidiankural.com: ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை
பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல்
நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க
இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை
என்றே தோன்றுகிறது .
தாலி
கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது
என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர்
மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை
என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர்
தான் பெண்களின் கழுத்து தாலி புனித பொருளாக மாற்றபட்டு நடைமுறைக்கு வந்ததாக
கருதலாம் . அதன் பின்னரே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கு தாலி
அணிவிக்கும் திருகல்யாண நிகழ்வு கள் நடத்தபட்டுள்ளன தம் குல பெண்ககளுக்கு
மேலாடை அணியும் உரிமை கோரி குமரி பகுதி நாடார்கள் நடத்திய தோல்சீலை
போராட்டத்தை ஒடுக்க அன்றைய நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்த அந்த
இடம் இன்று “தாலியறுத்தான் சந்தை” என்ற வழங்கபடுகிறது .
தொல்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை தீயவை அண்டாமல் காப்பதற்காக அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்’ஐம்படைதாலி’ என்று குறிப்பிடுகின்றனர் இன்றும் கூட நான் பயனப்படும் மலை கிராமங்களில் இந்த பழக்கம் உள்ளதை காண்கிறேன் . கி.பி 7ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்வோம் .
//புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு:54)//
// புலிப்பல் தாலி புன்தலைச் சிறார் (புறநானூறு :374)//
மாறாக வீரத்தின் சின்னமாக புலிப்பல்லை ஆண்கள் அனிந்தணர் என்ற செய்தியை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக அணிந்து கொண்டதால் அதனை “புலிப்பல் தாலி” என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்து பேசவும் எழுதவும் தொடங்கியது . 1968 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தாலி இல்லாத சுயமரியாதை திருமண சட்டத்தை சட்டபூர்வமாக அலங்கரித்தது அண்ணா ஆட்சி காலத்தில் தான் .
கடைசியாக ஒரு செய்தி சங்க இலக்கியத்தில் தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கல பொருளாக இன்று கருதப்படும் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் பேசபடவே இல்லை
மஞ்சள் பூசி குளிப்பது கிருமி எதிர்ப்பு சக்தி ஆரோகியம் தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் இருந்துள்ளது .’நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்’ கண்ணனை நீராட்டுவதை பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது .எனவே குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளை தமிழர்கள் பயன்படுத்தி வருவது தெரிகிறது .
“விறலி மஞ்சள்” பூசு மஞ்சளில் புகழ் பெற்றது ஆகும் . விரல் என்றால் முகபாவனை விரலி என்பது முகபாவங்களை மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணை குறிக்கும் . அன்று கூத்தாடிய பெண்கள் விளக்கொளியில் தான் நடனமாடினர்: முகம் பளிச்சென்ற தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி கொண்டனர் . விரலியர் மட்டுமே பூசி கொண்ட மஞ்சளை காலப்போக்கில் குடும்ப பெண்களும் பூச தொடங்கினர் . விரலியரை மதியாத நம் சமூகம் விரலி மஞ்சளை மட்டும் கொண்டாட தொடங்கியது .
டாக்டர் நீங்கள் தாலி பற்றிய நெடும் தரவுகளை தெரிந்து கொள்ள விரும்பினால் பாளையங்கோட்டை போகும் போது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டீர்களானால் நிறைய தரவுகளை முன் வைப்பார் .
நன்றி: பேராசிரியர் தொ.ப.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக