
மணிசங்கர்
அய்யர் பக்கத்து நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது
குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும். இதேபோல் பாகிஸ்தான்
ராணுவத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரபிக், குஜராத்
மாநில முதல்–மந்திரியாக அகமது பட்டேலை நியமிக்கவேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்து இருக்கிறார். வேறொரு நாட்டு ராணுவத்தின் உளவு பிரிவில் முக்கிய
பதவி வகித்தவர்கள் அகமது பட்டேலை முதல்–மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று
ஏன் கூறுகின்றனர்?...என்றார்.
குஜராத் சட்டசபை
தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி
நடக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க
வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த
குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள மன்மோகன் சிங், மன்னிப்பு
கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பிரதமரின் குற்றச்சாட்டால் நான்
மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் என கூறிஉள்ள மன்மோகன் சிங், பிரதமர் மோடியின்
மறைமுக குற்றச்சாட்டு, பொய்யான தகவல்களை மறுக்கின்றேன்.
மோடி
கூறுவது போல் மணிசங்கர் அய்யர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில்
குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து யாரிடமும் நான் விவாதிக்கவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் தேச விரோத நடவடிக்கைகள் எதையும்
தூண்டிவிட்டவர்களும் அல்ல என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும்,
குஜராத் தேர்தலில் தோல்வி என்ற பயத்தின் காரணமாக விரக்தியில் இதுபோல்
குற்றச்சாட்டுகளை மோடி சுமத்துகிறார். இது மிகவும் வேதனைக்குரியது. தனது
குற்றச்சாட்டுகள் மூலம் பிரதமர் மற்றும் ராணுவ தலைவர் உள்ளிட்ட ஒவ்வொரு
அரசியலமைப்பு அலுவலகத்தின் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான
முன் உதாரணத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் சமரச
போக்கை கொண்டுள்ள ஒரு கட்சி மற்றும் பிரதமரிடம் இருந்து காங்கிரசுக்கு
தேசபக்தி குறித்த அறிவுரை எதுவும் தேவையில்லை.
பாகிஸ்தான்
பயங்கரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய போது, அதே
நாட்டின் உளவுத்துறையை விமானப்படை தளத்தில் விசாரிக்க அனுமதி அளித்தது ஏன்?
என்பதை பிரதமர் மோடி மக்களுக்கு முதலில் விளக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக