நீங்கள் அடுத்த முறை கோயம்புத்தூர் செல்ல
நேரிட்டால், அங்கு துப்புரவுத் தொழிலாளி ஒரு பொறியாளராகவோ அல்லது
எம்.பி.ஏ. பட்டதாரியாகவோ இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். துப்புரவு
தொழிலாளி பணிக்கு எம்.பி.ஏ. பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்து வேலைப்
பெற்றுள்ளதாக கோவை உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை உள்ளாட்சி நிர்வாகம் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்குப் பணிகள் வழங்க முடிவு செய்தது. இதற்காகக் கடந்த 3 ஆண்டுகளாக 50 தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
இதில், பணிக்கான தேர்வு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூனியர் அசிஸ்டெண்ட் மற்றும் பில் கலெக்டர் பதவிகளுக்கு டைப் ரைடிங் தகுதியாகவும், குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்பும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் நேரடி நியமனம் மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிகளுக்கு பொருந்தும். ஆனால் விண்ணப்பித்திருந்தவர்கள் டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களுக்கு அலுவலகப் பணிகள் வழங்கப்படாமல், துப்புரவுப் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில் எம்.பி.ஏ. பொறியியல் பட்டதாரிகள் அடங்குவர். துப்புரவு தொழிலாளர் பணிக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
இது தொடர்பாக ஜே. புவனேஸ்வரி என்ற துப்புரவு தொழிலாளர் கூறுகையில், பணத்தைவிட என்னுடைய சுய மரியாதை ஒரு அடி மேலானதாக இருக்கிறது. மற்ற ஊழியர்களின் கைகளில் மோசமான நடவடிக்கையை என்னால் கையாள முடியாது என்று கூறுகிறார். பி.எட். முடித்த இவர் ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற கனவோடு உள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள சிங்கநல்லூரில் உள்ள கே. சுரேஷ் குமார், கூறுகையில், நான் எம்.பி.ஏ படித்துள்ளேன். என்னுடைய தந்தையின் இறப்புக்குப் பின்பு, 2015 ஆம் ஆண்டு முதல் வேலைக்காக கார்ப்பரேஷன் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தேன். தனது முதுகலை பட்டப்படிப்பை முடிக்க 3 லட்சம் வங்கி கடனைப் பெற்றேன். நான் முதல் தலைமுறை பட்டதாரி. எனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு நிர்வாக சார்ந்த வேலைக் கிடைக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு தடவையும் வீதிகளைச் சுத்தம் செய்ய முற்படும்போது, நான் மிகவும் துயரப்படுகிறேன் என்று கூறுகிறார்.
இவர்களுக்குப் படிப்புக்கு ஏற்ற பணி வழங்கப்படுமா? மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக