செவ்வாய், 28 ஜூன், 2016

பார்பனர்கள் கொல்லப்பட்டால் அரசு துறைகள் படு வேகமாக செயல்படும்? தலித் கொல்லப்பட்டால்....?

மிஸ்டர் ஒய்.ஜி. மகேந்திரன்,
உங்கள் ஆட்கள் யாராவது கொல்லப்பட்டால் அரசுத்துறைகள் விரைந்து செயல்பட்டுவிடும். அல்லது நீங்கள் யாரையாவது காலிசெய்தாலோ அத்துறை செயல்படாமலே இருந்துவிடும் (உங்கள் பள்ளியின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட மாணவனின் வழக்கில் நீங்கள் ஒரு ரோமத்தைக் கூட இழக்கவில்லை இல்லையா...)
இங்கே ஒரு தலித்துக்காக அரசுத்துறை தன் கடமையை செய்யவே நாங்கள் கும்பல்கூடி ஃபேஸ்புக்கில் அழவேண்டியிருக்கிறது, சாலைகளில் ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருக்கிறது.
நாங்கள் பலவீனமானவர்களின் குரல் சமூகத்திற்கு கேட்பதற்காக பேசுகிறோம். உங்களைப்போல சாவுக்கு அழ செத்தவனிடம் முப்புரி நூல் தட்டுப்படுகிறதா என தேடுவல்திலை.
போட்டது பெரியவா என்பதால் கொல்லப்பட்ட சங்ககரராமன் விவகாரத்தில் நீங்கள் எல்லோரும் பொத்திக்கொண்டிருந்தீர்கள்.
அப்போது அந்த பிராமணன் பக்கம் நாங்கள்தான் நின்றோம், இப்போதும் சங்கரராமனுக்கு நீதி வேண்டும் என நாங்கள்தான் பேசுகிறோம், அங்கே உங்கள் பிராமண பாசத்தின் சாம்பிளைக்கூட காண முடியவில்லை..
உங்கள் அழுகையில் ஸ்வாதிக்கான கவலை கடுகளவும் இல்லை, சூத்திரன் சாவுக்கெல்லாம் அழ ஆளிருக்கிறதே எனும் வயிற்றெரிச்சல்தான் வெளிப்படுகிறது, கூடுதலாக முஸ்லீம் வெறுப்பும். அந்த அழுகுரலும் ஒரு சங்பரிவார பொறுக்கியிடம் இருந்து இரவல் வாங்கியது.
பாஜகவில் பொறுப்பு கிடைக்க நீங்கள் இவ்வளவு மெனக்கெட வேண்டாம். அந்த தகுதி உங்களுக்கு பிறப்பிலேயே இருக்கிறது

கருத்துகள் இல்லை: