வியாழன், 30 ஜூன், 2016

காபரெட் மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் "டிசண்டிங் டையக்னசிஸ்"(Dissenting Diagnosis”). னியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”).  நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் 78  மருத்துவர்களை சந்தித்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தை குறித்து கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மருத்துவர்கள் அருன் கேத்ரே மற்றும் அபய் சுக்லா ஆகியோர் இப்புத்தகத்தை  எழுதியுள்ளார்கள். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்” குறிப்பாக 1990-களுக்கு பிறகு மருத்துவம் எந்த அறமுமில்லாத தொழிலாக சீரழிந்திருக்கிறது, எப்படி வணிகமாக மாறியிருக்கிறது  என்பதை மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினுடாக விவரிக்கிறார்கள்.

கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஆதிக்கம், மருந்து தயாரிப்பு (பார்மா) நிறுவனங்களின் ஆதிக்கம், தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள் என பலவற்றை மருத்துவ துறையினுள்ளிருந்துவரும் மனசாட்சியின் குமுறலாக இக்குரல்கள் ஒலிக்கின்றன. ஒவ்வொரு மருத்துவர்களின் கருத்துகளாக தொகுக்காமல் பொருத்தமான தலைப்புகளில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்திருகிறார்கள். இவ்வடிவம் குறிப்பிட்ட பிரச்சனை முறைகேடு தொடர்பான தொகுப்பான கருத்துகளை எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது.
தனியார்மயம் போட்டியை உருவாக்கி குறைந்த செலவில் சிறப்பான சேவையை தரும் என்ற தனியார்மய ஆதரவாளர்களின் வாதங்கள் நடைமுறையில் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தனியார்மயம் மருத்துவம் என்ற துறையை மீளமுடியாத நிலைக்கு தள்ளியிருப்பதை இம்மருத்துவர்கள் வாயிலாக அறிய முடிகிறது. பொருத்தமான சட்டங்கள், அரசு தலையீடு மூலம் சரிசெய்துவிட முடியும் என புத்தக ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் அளித்துள்ள விவரங்கள், முறைகேடுகளை படித்தாலே இவ்வமைப்பு முறை மீள முடியாத அளவிற்கு சீழ் பிடித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது.
அப்புத்தகம் முன் வைக்கும் சில பிரச்சினைகளை பார்ப்போம்.
ஒரு கார்ப்பரேட் மருத்துனையில் புதிதாக சேர்ந்துள்ள இளம்  மருத்துவர் இவ்வாறு கூறுகிறார். “ சார் ஒவ்வொரு மாதமும் எங்கள் மருத்துவனை சி.இ.ஓ உடன் ஆய்வு கூட்டம் நடக்கும். அவர் என்னிடம் புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களின் மாற்ற விகிதம் 10-15% ஆக இருக்கிறது. இது அனுமதிக்க முடியாது. இது மீண்டும் தொடர்ந்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்தார்”. “தொழில் முறையில் தன்னை தக்கவைத்துகொள்ள இம்மருத்துவர் இலக்கை அடைவதை தவிர வேறு வழியில்லை.  மருத்தவர் எனும் மக்கள் தொண்டர் அறமா இல்லை கார்ப்பரேட் மருத்துவமன முதலாளியின் அடிமையா என்று வரும்போது இவரைப் போன்றவர்கள் பின்னதை ஏற்கின்றனர். எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இப்படி இலக்கு நிர்ணயிக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வழியில்லை” என்கிறார் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒன்றின் மூத்த மருத்துவர்.
மூத்த இதய நிபுணர் மருத்துவர் கவுதம் மிஸ்டிரி தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார், “ கார்டியாலஜி முடித்த சில மாதங்களில் அரசு மருத்துவமனையில் வேலை செய்தேன். அங்கு காய்ச்சல், இருமலுக்கு மருத்துவம் பார்க்கவே அரசு என்னை பயன்படுத்தியது. அதனால் அங்கிருந்து வெளியேறி ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கோ மருத்துவனையில் லாபத்தை அதிகரிக்க  தேவையில்லாத பரிசோதனைகள், தொடர் சிகிச்சை முறைகளுக்குள் நோயாளிகளை கொண்டு செல்வது, நோயாளிகளை தேவையான நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பது என முறைகேடான வேலைகளை செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். என் மனசாட்சி உறுத்தவே அங்கிருந்த்து வெளியேறிவிட்டேன்” என்கிறார்.
தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைப்பதன் மூலம் கொள்ளையடிப்பதை மருத்துவர்கள் விவரிக்கிறார்கள், “ உதாரணமாக டைபாய்டு காய்ச்சலை எடுத்துக் கொள்ளுங்கள், நோய்வாய்பட்ட ஐந்து நாட்களுக்குள் இரத்த பரிசோதனை செய்தால் உங்களால் எதையும் கண்டறிய முடியாது. ஆனால் ஒரு நாள்விட்டு ஒரு நாள் இப்பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை எந்தளவுக்கு செலவானதோ அந்தளவுக்கு அப்பரிசோதனை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. சின்க் (sink)டெஸ்ட் என்று ஒரு பதம் எங்கள் துறையில் பேசப்படுகிறது. உங்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரி பரிசோதனைக்கு செல்லாமல் கழிவுநீர் பகுதிக்கு செல்வதைதான் இப்படி அழைக்கிறார்கள். பரிந்துரைக்கும் மருத்துவமனை/மருத்துவருக்கும் பரிசோதனை நிலையத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது நடக்கும். இருவருக்கும் பரஸ்பரம் லாபம்.”
புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
மக்கள் அறைகுறையாக விவரம் தெரிந்திருப்பதிலிருந்து தனியார் மருத்துவமனைகள் எப்படி காசு பார்க்கின்றன என்பதை  விவரிக்கிறார் ஒரு மருத்துவர், “பிளேட்லெட் கவுண்ட் என்ற பதத்தை மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.  சாதாரண வைரல் காய்ச்சலுக்கும் இதன் எண்ணிக்கை குறையும். இவர்களில் வெகு சிலருக்குதான் தீவிர சிகிச்சை தேவைப்படும். ஆனால் மருத்துவமனைகளோ நோயாளிகளிடம் இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு பதிலாக 1,50,000 ஆக குறைந்திருக்கிறது என்று பீதியூட்டுகிறார்கள். வசதியான நோயாளியாக இருந்தால் அப்படியே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து பல்லாயிரக்கணக்கில் வசூல் செய்துவிடுகிறார்கள்.
இது போலவே பிறக்கும் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த அளவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது இயல்பு. 14-16 மி.கி பிலிருபின் அளவை தாண்டும் போது தான் அது ஆபாத்தானதாகிறது. அதே சமயத்தில் விடலை பருவத்தினருக்கு 1மி.கி அளவை தாண்டினால் ஆபத்தானது. இதில் மருத்துவமனை என்ன செய்யும்மென்றால் விடலை பருவத்தினருக்கான சீட்டில் பிறந்த குழந்தையின் பரிசோதனை முடிவை எழுதி கொடுப்பார்கள். இதை பார்க்கும் குடும்பத்தினர் 1மி.கிக்கு குறைவாக இருப்பதற்கு பதில் குழந்தைக்கு இரண்டு இலக்கத்தில் இருக்கிறதே என அஞ்சி மருத்துவமனைக்கு எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராகிவிடுவார்கள். அதோடு தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தையை அசாத்யமாக காப்பாற்றிய மருத்துவமனையை போற்றி புகழுவார்கள்.”
தனியார் மருத்துவனை முறைகேடுகளை சொந்த அனுபவத்திலிருந்து அடுக்குகிறார்கள் மருத்துவரகள், “ஒருவருக்கு குடலிறக்கம் கண்டறியப்பட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சில தையல் மட்டுமே போட்டு அனுப்பினார்கள்”
“எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிருக்கிறது. உண்மையில் எந்த அறுவை சிகிச்சையும் செய்யாமல் மேலோட்டமான கீறல் மட்டும் செய்துவிட்டு முழு அறுவை சிகிச்சைக்கான பணம் வசூலிக்கப்பட்டது”
மருத்துவர்கள் அபய் சுக்லா மற்றும் அருண் கேத்ரே
மருத்துவர்கள் அபய் சுக்லா மற்றும் அருண் கேத்ரே
“சாதாரண கன்ணாடி அணிந்தால் சரியாகும் பிரச்சணைக்கு கண்புறை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்கிறார்கள். 30,000-40,000 வரை பிடுங்கிக்கொள்கிறார்கள். வாரத்திற்கு இது போன்ற இரண்டு அல்லது மூன்று பேரை பார்க்கிறேன். காப்பீடு இருப்பவர்கள் இப்படியான வலையில் உடனடியாக விழுந்துவிடுகிறார்கள். கண்புறை அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்திவிட்டு யாரோ பரிந்துரைத்தார்கள் என்ற அடிப்படையில் என்னிடம் வருகிறார்கள். அவர்களை பரிசோதித்துவிட்டு கண்புறை இல்லை கண்ணாடியே போதும் என்று கூறினால் என்னை சந்தேகமாக பார்க்கிறார்கள்.அவர்களுக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. நான் சரியாக பரிசோதிக்கவில்லையோ என அஞ்சுகிறார்கள். அறுவைசிகிச்சை செய்யும்படி வற்புறுத்துகிறார்கள்.” என்கிறார் ஒரு மருத்துவர்.
“மருத்துவர்கள் மருத்துவ கட்டணத்தைவிட கமிசன் மூலமாகத்தான அதிகம் சம்பாதிக்கிறார்கள். அது தான் அவர்களது பிரதான வருமானமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் எக்ஸ்-ரே விற்கு 25%, எம்.ஆர்.ஐ சி.டி ஸ்கேனுக்கு 33% கமிசனாக  எங்களுக்கு தருகிறாரகள்.”
பூனாவைச் சேர்ந்த மருத்துவர் பிரதிபா குல்கர்னி கூறுகிறார், “சமீப காலத்தில் மருத்துவ கட்டணம் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் எங்களை போன்ற மருத்துவர்களே இதை தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.
“தடுப்பூசிகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது. யாருக்கு எதை பரிந்துரைப்பது என்று தெரியவில்லை. நாம் பரிந்துரைத்தால் நோயாளிகள் அதை கட்டாயம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு மிக அதிக செலவை ஏற்படுத்தும். மருந்து தயாரிப்பிலிருந்து தனியார் நிறுவனங்களை விலக்கி வைக்கவேண்டும். அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.” என்கிறார் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.
“ஒரு மருத்துவ மாணவர் மருத்துவராக வெளியே வரும்போதே மருந்து நிறுவனங்கள் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொன்டு வந்துவிடுகின்றன. இந்நிறுனங்களின் பிரதிநிதிகள், தொழிமுறை மருத்துவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். “நாம் அம்மருத்துவர்களை கேட்பது ஒன்று தான், மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் உங்களுக்கு பாடமெடுப்பது வெட்கமாக இல்லையா?” என்கிறார் மருத்துவர் சஞ்சிப் முகோபாத்யா
தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. பார்மசி மற்று லேப்ககளுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும்.
தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்தகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும்.
“இன்று மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை தங்கள் கைப்பாவையாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் வெறும் கைப்பாவைகள். மருந்து நிறுவனங்களில் தாளத்துக்கு ஆடும் கைப்பாவைகள்” என்கிறார் மருத்துவர் ராஜேந்திர மலோஸ்.
“கார்ப்பரேட் மருத்துவமனைகள் உங்களுக்கு அதிகமான சம்பளம் தரும். அதை திரும்பபெறுவதற்கான பொறுப்பை உங்கள் தலையில் சுமத்தும். மருத்துவரால் முடியவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார். ஒரு விமான நிறுவனத்தில் விமானம் பறக்காமல் எப்படி அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியாதோ அப்படி தான் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும். இங்கு மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையிலும் ஏதாவதொரு அறுவைசிகிச்சை அல்லது தொடர் சிகிச்சை இல்லாமல் இவர்களால் இயங்கமுடியாது.”
நாசிக்கை சேர்ந்த மருத்துவர் ஷ்யாம் அஷ்டேகர் கூறுகிறார், “தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்துகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும். பின்னர் இந்த மருந்தகம், ஆய்வகங்களுக்கு வளாகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்துகொள்வார்கள். தேவையற்ற மருத்துவ முறைகளுக்குள் நோயாளிகளை தள்ளுகிறார்கள். சாதாரண நோய்களுக்கு கூட அறுவை சிகிச்சை செய்யவைக்கப்படுகிறாரக்ள்”.
“ ஒரு சாதாரண வியாபாரத்தில் கூட அது நியாயமாக நடந்ததா இல்லை அநியாயமா என்று பகுத்துப்பார்க்க முடிகிறது. ஆனால் அது மருத்துவத்தில் முடிவதில்லை. நோயாளியிடம் வசூலிக்கும் கட்டணத்தைவிட கமிசன் மூலம் சம்பாதிப்பது அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவ துறையில் வெளிப்படை தன்மையில்லாதது கவலைக்குரியதாக இருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவனைகள் அதிகரிப்பதோடில்லாமல் வலுவாக காலூன்றிவிட்டார்கள். அரசின் பாராமுகம் காரணமாக அரசு மருத்துவம் வலுவிழந்துவிட்டது. கார்ப்பரேட்கள் வருகையுடன் மருத்துவதுறையின் முன்னுரிமையும் மாறிவிட்டது. தற்போது மருத்துவர்களின் முன்னுரிமை நோயாளிகளின் நலன் அல்ல; மாறாக மருத்துவமனை பங்குதாரர்களின் லாபம் தான் அவர்களது முன்னுரிமை” என்கிறார் சென்னை மருத்துவர் அர்ஜூன் ராஜகோபாலன்.
நோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் இம்மருத்துவர்
நோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் ஒரு மருத்துவர்
“தனியார் மருத்துவ தொழில் என்பது பணம் சம்பாதிப்பதை ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கிறது. தங்கள் மெர்சிடிஸ் கார்களுக்கு தவணை கட்டவும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் மேலும் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பது இது தான் தனியார் மருத்துவத்தின் குறிக்கோளாக இருக்கிறது. ஆரோக்கியம் என்ற அறிவியலை சுயநல அழிவுவின் அறிவியலாக மாற்றிவிட்டிருக்கிறது.” என்கிறார் ஒரு மருத்துவர்.
நோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் இம்மருத்துவர். “ஒரு மருத்துவர் மருத்துவமனையில் திருடுவதை உங்களால் நம்ப முடியுமா? எனக்கு தெரிந்த மருத்துவர் நோயாளிக்காக சலைன் பாட்டிலை திருடினார். ” நோயாளி ஆதரவில்லாமல் இருந்தார். அவருக்கு வேறு வழியில்லை. நீங்கள் புகழ் பெற்ற மருத்துவமனை என்பதால் விருப்பம்போல வசூலிப்பீர்களா? இது சரியில்லை” என்கிறார் மருத்துவர் சிரிஷ் பட்வர்தன்.
மருத்துவர் சஞ்சய் நகரால், “சமூகம் மருத்துவரை மதிப்பிடும் முறையும், மருத்துவர் தன்னை மதிப்புடும் முறையும் மாறியிருக்கிறது. பெரிய கார்களையும், அதிக பணம் கொண்டவர் தான் வெற்றிகரமான மருத்துவராக பார்க்கப்படுகிறார். தனியார் மருத்துவம் அறநெறிகளுக்கு இடமில்லாததாக இருக்கிறது. போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது. “ என்கிறார் .
– ரவி
புத்தகத்தை வாங்க: Dissenting Diagnosis  வினவு.காம்

கருத்துகள் இல்லை: