'The clearance of the Model Shops and Establishments (Regulation of Employment and Conditions of Services) Act 2015' என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், 24 மணி நேர சேவை சாத்தியப்படும்.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்ததும், வருங்காலங்களில் தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள், வங்கிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, தங்களுக்கு உகந்தபடி செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக