அடுத்தடுத்த
திருப்பங்களுடன் அரங்கேறிவருகிறது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமாவுக்கு
பிறகான காட்சிகள். டில்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு
திரும்பினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதில் அதிர்ச்சியடைந்த அவரின்
ஆதரவாளர்கள் அவர் வீட்டில் திரண்டனர். அதில் இரண்டு தொண்டர்கள் தீக்குளிக்க
முயற்சி செய்தனர். அப்போது
இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை), வி.ஆர். சிவராமன் (காஞ்சி வடக்கு) உள்பட 38 மாவட்ட தலைவர்கள் தங்களது மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். “நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் யாரும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” என
அவர்களை இளங்கோவன் சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி.
‘திங்கள்கிழமை நாளிதழ்களை பார்த்த சோனியாகாந்தி, ‘நமது காங்கிரஸ் குறித்து தொடர்ந்து தமிழகத்தில் இருந்து நெகடிவ் செய்திகளாகவே வருகிறது. வேறு தலைமையை நியமிப்போம்’ என்று கோபமாக கமன்ட் பாஸ் செய்துள்ளார். அதன்பின் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமாவை சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வந்தது. தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கலாம் என்று ஒரு யோசனை டில்லி மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் பார்வையாளர்கள் மூலம் வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை குறிவைத்து தற்போது திருநாவுக்கரசுவும், சுதர்சன நாச்சியப்பனும் டில்லியில் வலம் வருகின்றனர்.’ என்கின்றனர் டில்லியை சேர்ந்த சீனியர் தலைவர்கள்.
அதேசமயம், ‘கடந்த அதிமுக ஆட்சியின்போது விஜயகாந்த், ஜி.கே.வாசன் போன்றவர்கள் கூட பெரியளவில் மக்கள் பிரச்சனைகளில் போராட்டங்களில் ஈடுபடவில்லை. ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல போராட்டங்களில் ஈடுபட்டார். அதிமுகவுக்கு எதிராக காங்கிரசை நிலைப்படுத்தினார். அவரை ராஜினாமாவுக்கு நிர்பந்தம் செய்துவிட்டார்களே’ என்று குமுறும் அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை காட்டும்வண்ணம் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். அந்தவகையில் ‘தேர்தலில் நல்ல முடிவை என்னால் ஏற்படுத்தி தர முடியவில்லை. எனவே தோல்விக்கு பொறுப்பேற்று வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என ராயபுரம் மனோ தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இன்னும் காங்கிரசில் அனல் குறையவில்லை. minnambaslam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக