Each invitation card printed for the wedding of Bellary JD (S) leader and mining baron N R Suryanarayana Reddy's son is said to be costing a whopping Rs 15,000பெல்லாரி : பெல்லாரி சுரங்க அதிபரும், தேவகௌவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சூரிய நாராயண ரெட்டி, தன் மகன் சரத் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். அழைப்பிதழ்களை தயாரிப்பதில் புகழ் பெற்ற, மும்பை ரவீஷ் கபூர் பிரின்டர்ஸ் நிறுவனத்தில், இந்த அழைப்பிதழ்களை தயாரித்துள்ளனர். இவர்கள், ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ராஜ்குந்த்ரா, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோரின் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளனர்.
சூரிய நாராயண ரெட்டியின் மகன் சரத். சென்னையை சேர்ந்த, சத்தியம் பிரசாத்தின் மகள் ஆத்மிகாவை, வரும், 29ம் தேதி சென்னையிலுள்ள, லீலா பேலசில் திருமணம் செய்ய உள்ளார். ஜூன், 3ம் தேதி பெல்லாரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. இந்த திருமணத்துக்காக, சிறப்பாக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் ஒவ்வொன்றும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடையதாகும்.
திருமண அழைப்பதழில், தங்க இழைகளால் "எம்ப்ராய்டரி' செய்யப்பட்டு, தங்க நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் முகப்பில், விநாயகர் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த அழைப்பிதழ் மிகவும் முக்கிய, வி.ஐ.பி.,களுக்கு மட்டுமே வழங்கப்படும். அழைப்பிதழுடன் வழங்க, உலர்ந்த பழ வகைகள் கொண்ட பெட்டிகள், துபாயிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 7,500 ரூபாய் மற்றும், 450 ரூபாய் மதிப்பிலும், அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக