தமிழக சட்டப்பேரவையில் புகழ் பாடுகிறவர்களைத் தவிர வேறு யாரும் பேச முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.சென்னை,
கோபாலபுரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
மதுரையில் தமிழ்த்தாய் சிலை வைக்க ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளனர். ஆனால்,
எல்லா நாடுகளிலும் தாய் மொழி பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலகட்டத்தில்,
தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் ஆங்கிலக்
கல்வியைப் புகுத்தப் போவதாக கூறியுள்ளனர்.தமிழ்த்
தாய்க்குச் சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும்
எவ்வளவு முரண்பாடானவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.>எதிர்க்
கட்சி உறுப்பினர்கள் பேரவைக்கே போக முடியாத நிலை இருக்கிறது. பேச வேண்டும்
என்று சட்டப்பேரவைக்கு செல்வோருக்கு அங்கு வேலை இல்லை. 110வது விதியின்படி
ஓர் அறிக்கை படித்தால் அதில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஏற்றுக்
கொள்ளப்பட்ட மரபு.அந்த
மரபைத் தங்களுக்குச் சாதகமான கருவியாக வைத்துக் கொண்டு, 110வது விதியின்
கீழ் அறிக்கை படிக்கின்றனர். அரசியல் தெரிந்த நண்பர்கள் பேரவையில்
இருக்கின்றனர். அவர்கள் கூட இது பற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை
என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கருணாநிதி கூறினார்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக