வியாழன், 16 மே, 2013

ஸ்ரீசாந்த் உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், சூதாடுவோரிடம் கையூட்டு பெற்று, அவர்கள் விருப்பத்திற்கேற்ப விக்கெட் வீழ்த்தும் அல்லது பந்து வீசும் ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் குற்றத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவைச் சேர்ந்த கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கித் சவான் ஆகியோர் வியாழன் அதிகாலை மும்பாயில் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்ட இடைத்தரகர்கள் ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
53 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் பந்தயங்களிலும் விளையாடியிருக்கும் ஸ்ரீசாந்த் இதற்கு முன்னரும் சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாக்குவது இதுவே முதல் முறை.

ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் இணை உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, கைதுகள் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் ஆனால் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளின் போது ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஐந்து வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  bbc

கருத்துகள் இல்லை: