புதன், 15 மே, 2013

பண்ருட்டி' - பிரேமலதா தேமுதிகாவில் ஈகோ பிரச்னை innova ஆடர் பண்ணியிருக்காகளா?

 அதிமுகவுடன் தான் கூட்டணி என்று உறுதி கூறினால் பண்ருட்டியின் ஈகோ எல்லாம் பறந்து விடும். எம் ஜி ஆருக்கே சுவிஸ் அல்வா கொடுத்தவராயிற்றே.......
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பூர் பொதுக் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை விட, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத பிரேமலதாவிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என, கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
"ஈகோ' பிரச்னை
குறிப்பாக, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில், யார் முதலில் பேசுவது என்பதில், இவர்கள், இருவர் இடையே," ஈகோ' பிரச்னை உள்ளது.
சில மாதங்களுக்கு முன், சென்னையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார்.இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு, அவரை, தே.மு.தி.க., தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பிரேமலதா பங்கேற்ற நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன், பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.இந்நிலையில், மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழிற்பாதிப்பை கண்டித்து, திருப்பூரில், சமீபத்தில், தே.மு.தி.க., சார்பில், அ.தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கேற்று பேசுவர் என, அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் சென்ற விமானத்திலேயே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், திருப்பூர் செல்வதை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார். இதுகுறித்து, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்த போது, "சில நாட்களாகவே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், சட்டசபைக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறார். இதன் காரணமாகவே, திருப்பூர் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை' என்றனர்.
"பிடிக்கவில்லை'
அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியலில், நாகரிமான பேச்சை கடைப்பிடிக்க வேண்டும் என, பண்ருட்டி ராமச்சந்திரன் கருதுகிறார். ஆனால், அரசியலுக்கு புதியவரான பிரேமலதா, முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து பேசுகிறார். இது, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. இது மட்டுமின்றி, கட்சிக்காக, உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவதையும் அவர் விரும்பவில்லை. இதனால், சமீப காலமாக, பிரேமலதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் செல்வதை தவிர்க்கவே, "உடல்நிலை சரியில்லை' என்ற காரணத்தை, பண்ருட்டி ராமச்சந்திரன் தரப்பில், கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. - நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: