
அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 110வது விதியின் கீழ் அறிக்கை விடுவது மட்டுமே தமிழக அரசின் சாதனை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.விபத்து ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்த வேலூர் மாவட்ட திமுக கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் செந்தில்குமார் என்பவரை திமுக எம்பி கனிமொழி, மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. சட்டமன்றத்தில் விவாதம் நடத்தக் கூடாது என்பதற்காகத்தான், அதிமுக அரசு 110வது விதியின் கீழ் அறிக்கை வெளியிடுகிறது. விவாதம் நடத்தாமல் திட்டங்களை அறிவிப்பது ஜனநாயக விரோதம். தமிழகத்தில் மின்பற்றாக்குறையால் பல தொழில்கள் நசிந்துள்ளன என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக