வியாழன், 16 மே, 2013

சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது ஏன் ? அது திமுகாவின் திட்டம் என்பதால்தானே ?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது! கலைஞர் கண்டனம்!
சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 15.04.2013 புதன்கிழமை எழுச்சி நாள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசுகையில்,
சேது சமுத்திர திட்டம் திமுகவின் முயற்சியால் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு அல்ல. திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்ற நோக்கத்தில், இதனை அதிமுக அரசு முடக்க முயல்கிறது.
இருண்ட தமிழகம். இருள் நிறைந்த தமிழகம். இருள் நிறைந்த தமிழகத்திலே இன்றைக்கு நாம் இருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் அமைதி இல்லை. எங்கும் அமளி. காலையில் ஒரு கொலை, பிற்பகலிலே ஒரு கொலை, மாலையிலே ஒரு கொலை, அந்த பிணத்தை எடுத்து புதைப்பதற்குள்ளாக இரவியே ஒரு கொலை என்ற செய்தி பத்திரிகைகளில் தினசரி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வ-யுறுத்திவிட்டு, தற்போது அரசு அமைந்ததும் அதனை எதிர்ப்பது ஏன்? 1860ம் ஆண்டு காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் தொட்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டது என்றார்.
சேதுசமுத்திர திட்டத்தை முடக்க எண்ணி, உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதை வ-யுறுத்தும் கூட்டம் தான் இந்த எழுச்சி நாள் கூட்டம். இது தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பிரச்சனை. அவர்களின் தலையில் கை வைக்காதீர்கள் என்று ஜெயல-தா அவர்களை தமிழக மக்களின் எதிர்காலம் இருள் மயமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டத்தை தடுக்காதீர்கள். இந்த கூட்டம், ஜெயல-தாவை பார்த்து உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதற்கான கூட்டம். நான் சொன்னால் கேட்பார்களா. கேட்க கூடிய காலம் வரும். சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நமக்கு கிடைக்கும். இவ்வாறு பேசினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: