காவல்துறையின் செயல்களுக்கு மனித உரிமை
ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திட்டமிட்டு
காவல்துறையினர் நடத்தியிருப்பதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.
மதுரை:
திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலை வழக்கின் குற்றவாளிகளான பிரபு
மற்றும் பாரதி இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவத்துக்கு இருவரது உறவினர்களும் மிகக் கடுமையாக கண்டனம்
தெரிவித்துள்ளதுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் ரவுடி கும்பல் ஒன்றினால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மானாமதுரை புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்தனர். அதே நேரத்தில் ஐஐடி மாணவனான பிரபு உட்பட 3 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஆனால் இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பாரதி, பிரபுவின் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து பிரபுவின் உறவினரான செல்வம் என்பவர் கூறுகையில், எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைக்கும் ஐஐடி மாணவனான பிரபுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் பாரதியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக போலீசார் தேடியது. இதனால் அவனாகவே திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
நீதிமன்றத்தில் சரணடைந்த ஒருவன் எப்படி தப்பி ஓட முயற்சிப்பான்? 170 பேரை படுகொலை செய்த அஜ்மல் கசாப்பையே 4 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதானே தூக்கில் போட்டாங்க...? ஆனால் போலீஸ் கஸ்டடியில் இருந்தவங்களை தப்பி ஓடுனாங்க.. அரிவாளால் வெட்டுனாங்க... பெட்ரோல் குண்டு வீசினாங்க .. என்று சொல்வதெல்லாம் நம்பக் கூடியது அல்ல.. இது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர். http://tamil.oneindia.in/news/2012/12/01/tamilnadu-questions-raised-on-madurai-encounter-165523.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக