மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில்
கோபுரம் மற்றும் சர்ச் கோபுரம், எட்டு ஆண்டுகளுக்கு பின், முழுமையாக
நீருக்கு வெளியே காட்சியளிக்கின்றன.
மேட்டூர் அணை கட்டும் முன், நீர்பரப்பு பகுதியில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. வழிபாட்டுக்காக கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில், அதன் அருகில் நந்தி சிலை, அங்கிருந்து, 1 கி.மீ., தொலைவில் சர்ச் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.அணை கட்டி நீர் தேக்குவதற்காக, கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் அப்படியே இருந்தன.மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம், 82 அடியாக குறையும் போது, சர்ச் இரட்டை கோபுர முகப்பும்; 69 அடியாக குறையும் போது, நந்தி சிலை தலையும் வெளியில் தெரியும். 2004ம் ஆண்டு, நீர்மட்டம், 29 அடியாக குறைந்ததால், நந்தி சிலை, சர்ச் கோபுரம் முழுமையாக தெரிந்தது.எட்டு ஆண்டுக்கு பின், தற்போது, மேட்டூர் அணை நீர் மட்டம், 47 அடியாக குறைந்த நிலையில், அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வர் கோவில் கோபுர முகப்பு, சர்ச் கோபுரம் ஆகியவை, நீருக்கு வெளியே, முழுமையாக தெரிகின்றன. சேலம் மாவட்டம் உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும், சுற்றுலா பயணிகள், ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக