இனி திருமாவளவனுடன் கூட்டணி கிடையாது;
ஒழுக்கமான தலித் தலைவர் உருவானால்
கூட்டணி வைப்போம் : ராமதாஸ் பாமக
நிறுவனர் ராமதாஸ்
இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவம்
குறித்து விளக்கம் அளித்தார்.ஒரு
தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு,
அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை
தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம்
எழுதப்பட்டுள்ளது பாருங்கள் இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது,
ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்.
சிங்கபூர்,
அமெரிக்க மிசிசிப்பி, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாட்டில் உள்ளது
போல் பெற்றோரரின் சம்மதத்துடன் பெண்ணுக்கு18, ஆணுக்கு21 வயதிலும்
திருமணமும், பெற்றோர் சம்மதமின்றி பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 வயதிலும்
திருமணம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இதை விடுத்து 18, 20 வரை பெண்
குழந்தைகளை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா? என்றார்
ராமதாஸ்.http://www.nakkheeran.in/
கலவர
சம்பவத்திற்கு நாகராஜனின் மரணம் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன் பெண்களை
குறிவைத்து நடந்த ஈவ்டீசிங் கேலி கிண்டல்களும் காரணம். தமிழகத்தில்
ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க
வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பஸ்நிலையங்கள் முன்பு ஈவ் டீசிங்கை
தடுக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி,
அலுவலகம் நிறைந்த பகுதிகளுக்கு பெண்கள் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
வன்னியர்
சங்கமும், பா.ம.க.வும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை.
தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை. இந்த சம்பவத்தில் கைது
செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக
சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ விசாரணை நடத்து ஆட்சேபணை இல்லை. ஆனால்
உண்மை காரணம் வெளி கொண்டுவர வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க
முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக