சோனிபட்: 96 வயதில் இரண்டாவது முறையாக அப்பாவான ஹரியானா விவசாயின் புகைப்படம் பீட்டா அமைப்பின் விளம்பர போஸ்டரில் வரவிருக்கிறது.
ஹரியானா
மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கர்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர்
ராம்ஜித் ராகவ். 94 வயதில் 58 வயதான மனைவிக்கு குழந்தைபாக்கியம்
கொடுத்தவர். இந்நிலையில் அவரது மனைவி கடந்த மாதம் 2வது குழந்தையை
பெற்றெடுத்துள்ளார். அதாவது 96 வயதில் ராகவ் இரண்டாவது முறையாக
தந்தையாகியுள்ளார்.
தள்ளாத வயது தாத்தா என்று அவரைக் கூற முடியாது.
இந்த வயதிலும் மனிதர் கம்பீரமாக திடகாத்திரமாக உள்ளார். தனது மகன்களுக்கு
நல்ல வாழ்க்கையை அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் இனியும்
குழந்தை வேண்டாம் என்று தனது 60 வயது மனைவியை குடும்பக் கட்டுப்பாடு செய்ய
அறிவுறுத்தியுள்ளார்.பாதாம், வெண்ணெய், பால் மற்றும் சைவ உணவுகள் சாப்பிடுவது தான் தனது ஆண்மைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறைச்சி உண்பதையும், விலங்குகளின் தோலால் செய்த பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வரும் பீட்டா அமைப்பு தங்கள் விளம்பர போஸ்டர்களில் ராகவ் படத்தை போட்டு சைவ உணவு உண்பவர்களுக்கு 96 வயது வரை ஆண்மை இருக்கும் என்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக இது போன்ற விளம்பர போஸ்டர்களில் ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆன்டர்சன், ஆங்கில கவிஞரும் பிரபலமான இசையமைப்பாளருமான சர். பால் மெக்கார்ட்னி போன்றோரின் புகைப்படங்கள் வந்துள்ளன. இந்நிலையில் வரும் 2013ம் ஆண்டிற்கான பீட்டாவின் விளம்பர போஸ்டரில் முதன்முதலாக இந்தியாவைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் புகைப்படம் வரவிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக