லண்டன்:
ப்ரீகேஜி யில் தொடங்கி ப்ளஸ் டூ வரை பக்கம் பக்கமாக மாய்ந்து மாய்ந்து
ஹோம் ஒர்க் கொடுத்த மாணவர்களை இம்சை செய்வது நம் ஊர் பள்ளிகளின் வழக்கம்.
ஆனால் இவ்வாறு "மாணவர்களை ஹோம் ஒர்க் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக
பலன் ஏதும் ஏற்பட போவதில்லை,'' என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின், வெர்ஜினியா பல்கலை கழக ஆராய்ச்சியாளர், பத்தாம் வகுப்பு படிக்கும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். தினசரி மாய்ந்து மாய்ந்து ஹோம் ஒர்க் செய்யும் மாணவர்களின் திறனை இவர்கள் சோதித்து பார்த்தனர். இந்த ஆய்வின் மூலம், "ஹோம் ஒர்க் செய்வதனால், மாணவர்களுக்கு பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை' என்பதை இவர்கள் கண்டறிந்தனர்.
கணக்கு பாடத்தை தவிர, மற்ற பாடங்களை, "ஹோம் ஒர்க்' செய்வதில் மாணவர்களின் திறன் வளர்ந்ததாக தெரியவில்லை என்று ஆய்வுக் குழுவின் தலைவர் ராபர்ட் கூறியுள்ளார். வீட்டு பாடத்தால் மாணவர்கள், பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். மற்றபடி பெரிய சாதனை செய்ய இந்த, "ஹோம் ஒர்க்' துணை புரியவில்லை. சொல்லப்போனால், பள்ளியில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க் மாணவர்களின் மனதை நோகடிக்கிறது என்றும் ராபர்ட் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு அமெரிக்கா மாணவர்களிடையே நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டால் ஹோம் ஒர்க்கே வேண்டாம் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவில் கசக்கி பிழியப்படுகின்றனர் மாணவர்கள்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக