ஈரோடு மாவட்டத்தில், 200 ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் இருந்து எடுத்து வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, ஜவுளி ரகங்கள் தயார் செய்து அனுப்புகின்றனர். அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளுக்கும், ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் மாதம், 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. http://www.dinamalar.com/
மணி சென்னை - Chennai ,இந்தியா
தமிழ்நாடுலையே அ தி மு க வ அதிகம் ஜெயிக்க வெச்சது இவங்கதான் ஆப்ப வேண்டி விரும்பி வாங்கி வெச்சுகிட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா என்ன அர்த்தம் ?...
மின்தடை, நூல் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறையால், ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடை காரணமாக, ஆர்டர் எடுத்த ஜவுளி ரகங்களை, குறித்த நேரத்தில் அனுப்ப முடியாமல் உள்ளனர். இதனால், ஏற்கனவே, அனுப்பிய ஆர்டருக்கான தொகையை வசூல் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் பாதிப்பால், அதை சார்ந்த தொழில்களான சைசிங், டையிங், கேலண்டரிங், பிரிண்டிங் போன்ற உப தொழில்களும் பாதிப்பு அடைந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் சிவானந்தம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் மாதந்தோறும், 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வந்தது. மின்தடை, தொழிலாளர் பற்றாக்குறையால் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 500 கோடியில் இருந்து, 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி, ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். வரிச்சலுகை உட்பட பல , ஊக்குவிப்புகளை தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக